நற்கனிகள் தரும் வாழ்வு சாட்சிய வாழ்வு! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 9 ஆம் வாரம் – திங்கள்

2 பேதுரு 1: 1-7
மாற்கு  12: 1-12

 
நற்கனிகள் தரும் வாழ்வு சாட்சிய வாழ்வு!
 
முதல் வாசகம்.

  இந்த வாசகப் பகுதியில், திருத்தூதர் பேதுரு இயேசு கிறிஸ்துவின் நீதியினால் விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு அருளும் சமாதானமும் அதிகரிக்க வேண்டுமென வாழ்த்துகிறார். இறைவன் தமது தெய்வீக வல்லமையால் வாழ்க்கைக்கும் இறைப்பற்றிற்கும் தேவையான அனைத்தையும் நமக்குக் கொடுத்துள்ளார் என்று   கூறுவதோடு, உலக ஆசைகளால் வரும் அழிவிலிருந்து விடுபட்டு, இறைவனுடைய இயல்பில் பங்குகொள்ளும்படி அழைப்புவிடுக்கிறார். 
இதனால், இறைமக்கள் தங்கள் வாழ்க்கையில் பல நற்குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என பேதுரு அறிவுறுத்துகிறார். நம்பிக்கையோடு நற்பண்பு, அறிவு, தன்னடக்கம், பொறுமை, இறைப்பற்று, சகோதர அன்பு மற்றும் எல்லோரிடத்தும் அன்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார், . இவ்வகை நற்குணங்கள் கிறிஸ்தவ வாழ்வை முழுமையாக்கி, இறைவனுக்கு ஏற்ற வாழ்க்கையை நடத்த உதவுகின்றன என்று முடிக்கிறார் பேதுரு.

நற்செய்தி.

இவ்வாசகத்தில் இயேசு “திராட்சைத்தோட்ட உவமை” மூலம் யூத தலைவர்களின் நம்பிக்கையின்மையை எடுத்துக்காட்டுகிறார். ஒரு நிலத்தரகர் திராட்சைத்தோட்டத்தை அமைத்து அதை வேளாண்மையாளர்களிடம் ஒப்படைத்து தூரம் செல்கிறார். அறுவடை நேரத்தில் அவர் தன் பணியாளர்களை கனிகளைப் பெற அனுப்புகிறார். ஆனால் அந்த வேளாண்மையாளர்கள் அவர்களை அடித்து அவமதித்து சிலரை கொன்றுவிடுகின்றனர். இறுதியில் நிலத்தரகர் தன் அன்பு மகனை அனுப்புகிறார். “இவனே வாரிசு” என்று கூறி அவரையும் கொன்றுவிடுகிறார்கள்.
இதன் மூலம் இறைவன் அனுப்பிய இறைவாக்கினர்களையும் இறுதியில் இயேசுவையும் மக்கள் நிராகரித்ததை இயேசு சுட்டிக்காட்டுகிறார். ‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ” என்ற மறைநூல் வசனத்தையும் அவர் நினைவூட்டுகிறார். இயேசுவின் இந்த திராட்டைதோட்ட உவமை தங்களைப் பற்றியே கூறப்பட்டது என்பதை அறிந்த சமயத் தலைவர்கள் இயேசுவைப் பிடிக்க விரும்பினார்கள்; ஆனால் மக்கள் பயத்தால் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.

சிந்தனைக்கு.

இன்றைய நற்செய்தி எருசலேம் ஆலயத்தில் பஸ்காவின் போது, இயேசுவின் பாடுகள் மற்றும் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு நடைபெறுகிறது.தலைமை குருக்குளும் , மறைநூல் அறிஞர்களும் , மக்களின் மூப்பர்களும் கோபமடைந்து, இயேசுவைக் கொலைசெய்ய விரும்பினார்கள், ஆனால் இயேசுவைப் பின்சென்ற மக்களுக்கு அஞ்சினர். 

இன்றைய நற்செய்தியில் இயேசு திராட்சைத்தோட்ட உவமையின் மூலம்:
•    திராட்சைத்தோட்டத்தின் உரிமையாளர் → கடவுள் 
•    திராட்சைத்தோட்டம் → இறையரசு 
•    பணியாளர்கள்→ கடவுளால் அனுப்பப்பட்ட இறைவாக்கினர்கள் 
•    மகன் → இயேசு கிறிஸ்து போன்ற உள்ளார்ந்த படிப்பினையை வெளிப்படுத்துகிறார். 
 
பதட்டங்கள் அதிகமாக இருந்தபோதிலும், சமயத் தலைவர்களின் இதயங்களில் கோபம் நிறைந்திருந்தாலும், இயேசு தைரியமாக பேசினார். மக்கள் அவருடைய அதிகாரத்தையும் போதனையையும் கண்டு வியந்தாலும், அவர்கள் நிச்சயமற்றவர்களாகவும், அடுத்து என்ன நடக்குமோ என்று பயந்தவர்களாகவும் இருந்திருக்கலாம். இதுவே இன்று நம்மில் பெரும்பாலோரின் நிலையாக உள்ளது. 


கிறிஸ்துவின் திருவுடலில் (திருஅவையில்) உறுப்பினர்களாகிய நாம், கிறிஸ்துவின்   நிராகரிப்புகளையும் துன்பங்களையும் வெறும் நிகழ்வாக காணாமல். அது நமது கிறிஸ்தவ வாழ்வுக்கான முன் எச்சரிக்கையாகப் பார்க்க  வேண்டும். முதல் வாசகத்தில், புனித பேதுரு இறைவன் தமது தெய்வீக வல்லமையால் வாழ்க்கைக்கும் இறைப்பற்றிற்கும் தேவையான அனைத்தையும் நமக்குக் கொடுத்துள்ளார் என்ற செய்தியை மனதில் நிலைநிறுத்த வேண்டும். 

 


யூதர்கள் இயேசுவை நிராகரித்தன்ர குத்தகைக்காரர்கள் மகனை கொன்றது போல, மக்கள் இயேசுவையும் நிராகரித்தார்கள். இதன் மூலம் இயேசுவின் பாடு மற்றும் சிலுவை மரணம் முன்கூட்டியே சுட்டிக்காட்டப்படுகிறது.
அடுத்து, கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ” எனும் திருப்பாடல்கள் 118:22 காணப்ப்டும் இறைவாரத்தையை இயேசு பயன்படுத்தி இயேசுவே அந்த புறக்கணிக்கப்பட்ட கல்  என்பதை உறுதிப்படுத்துகிறார். ஆம், யூதர்களால் நிராகரிக்கப்பட்ட இயேசுவே மீட்பிற்கான அடித்தளமாக உள்ளார் என்பதைத் தெளிவுப்படுத்துகிறார் 

இறைவேண்டல்.

ஆண்டவரே, உமது திராட்சைத் தோட்ட்த்தில் நான் என்றும் பணிவும், நற்குணமும், பரிவும் கொண்ட பணியாராக விளங்கிட என்னைக் காத்தருள்வீராக. ஆமென் 


ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452