பொதுக்காலம் 14ம் ஞாயிறு | தினசரி மறைசாற்று | Veritas Tamil

பொதுக்காலம் 14ம் ஞாயிறு
"நீங்கள் எந்த வீட்டிற்கு சென்றாலும் இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!" என முதலில் கூறுங்கள் - லூக்கா 10:1-12, 17-20.
மண்ணைத் தேடியும் பொன்னைத் தேடியும்
பெண்ணைத் தேடியும் பெருமைத் தேடியும்
விண்ணைக் குடைந்து வியப்பாய் தேடியும்
கண்டார் உண்டோ காலமும் அமைதி?
உலகம் தேடும் உயரிய அமைதி
தலைவன் இயேசுவில் தாராளமாய் உண்டு!
எங்கு சென்றினும் அங்கே அமைதியை - இயேசு
'தங்க செய்க' என்று வாழ்த்தினார்!
"இந்த வீட்டிற்கு அமைதி உண்டாகுக! - என
வந்த வீட்டில் சொல்க" என்றார்!
ஏற்றுக் கொண்டால் அமைதி விளங்கும்
மறுத்துக்கொண்டால் உடனே திரும்பும்!
இம்மையும் மறுமையும் உனையன்றி
எம்மிலே அமைதி ஏது இறைவா?
ஏங்கிடும் மனதின் துயரங்கள்
நீங்கவே அமைதியால் எனில் நிறைவாய்!
எழுத்து
அருட்பணி. மோசஸ் ராஜா MMI
Daily Program
