எங்கும் சுதந்திரம்.... | அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil
பெரிய கடல். அதில் இரண்டு மீன்கள் கணவனும் மனைவியுமாகக் கூடி வாழ்ந்து வந்தன. கடல்தான் அவர்களின் தாய்வீடு. தாய்நாடு. அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். பிறந்த குட்டி மீன் கண்களைத் திறந்து பார்த்தது. எங்கும் தண்ணீர். துள்ளித்துள்ளி குதித்து விளையாடியது. உல்லாசமாக நீந்தத் தொடங்கியது. கடல் முழுவதையும் சுதந்திரமாகச் சுற்றி நீந்தி வந்தது.
ஒரு நாள் கடற்கரை ஓரமாகக் குட்டிமீன் நீந்திக்கொண்டிருந்த போது, ஆடல், பாடல் சத்தம் அதன் காதில் விழுந்தது. என்ன நடக்கிறது என்று பார்க்க தனது தலையை தண்ணீருக்கு மேல் உயர்த்திப் பார்த்தது. ஆச்சரியம்! அது மெரினா கடற்கரை! தன் வயதுள்ள சிறுவர்களெல்லாம் சில கொண்டிருந்தனர். பலூன்கள். சிலர் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டும், சிலர் மட்டைப்பந்து விளையாடிக்கொண்டும் இருந்தனர். அவர்களோடு சேர்ந்து விளையாடக் குட்டி மீனுக்கும் அளவு கடந்த ஆசை. விளையாடிக் சிறுவர்களின் கைகளில்
உடனே குட்டி மீன் தனது அப்பா அம்மாவிடம் ஓடி தான் மெரினா கடற்கரையில் கண்ட காட்சியையும், தானும் அங்கு சென்று விளையாட வேண்டுமென்ற ஆசையையும் எடுத்துக் கூறியது. அதைக் கேட்டதும் அப்பா அம்மாவுக்குக் கோபம் வந்தது. அப்பா குட்டி மீனிடம், "நீ கடல் நீரை விட்டு வெளியே சென்றால் உன் உயிருக்கு ஆபத்து.நீ இறந்து விடுவாய். எனவே இனிமேல் மெரினா கடற்கரை பக்கமே போகக் கூடாது" என்று கண்டிப்பாய்க் கூறினார்.
சில நாட்கள் குட்டிமீன் வீட்டிலேயே அமைதியாக இருந்தது. ஆனால் அதன் உள்ளத்தில் எப்படியாவது வாழ்க்கையில் ஒருமுறை மெரினா கடற்கரைக்குச் சென்று விளையாடிவிட்டு வரவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஒருநாள், பெற்றோர்கள் வேலைக்குச் சென்ற பின் குட்டி மீன் மெதுவாக மெரினா கடற்கரை பக்கம் நீந்திச் சென்றது. சிறுவர்கள் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களோடு சேர்ந்து விளையாட விரும்பிய குட்டிமீன் தண்ணீரிலிருந்து வேகமாகத் துள்ளிக் குதித்து மணல் தரையில் விழுந்தது. அந்தோ! பரிதாபம்! சுவாசிக்க முடியாமல் துடிதுடித்தது குட்டிமீன். அந்த நேரத்தில் காகம் ஒன்று பறந்து வந்து தன் கால்களால் குட்டி மீனைத் தூக்கிச் சென்று அருகிலுள்ள ஒரு சிறிய மரக்கிளையில் அமர்ந்தது.
அவ்விடத்தைச் சுற்றிலும் சில காதல் ஜோடிகள் நெருக்கமாக அமர்ந்து உறவாடிக் கொண்டிருந்தார்கள்.அப்போது குட்டிமீன் காதல் ஜோடிகளே! நான் கூறுவதைக் கவனமாகக் கேளுங்கள், "நான் அப்பா அம்மாவிற்குத் தெரியாமல் உல்லாசமாக விளையாடக் கடற்கரைக்கு வந்தேன்.இப்பொழுது என் வாழ்க்கை முடிய இருக்கிறது. கொடூரமாகச் சாக இருக்கிறேன். நீங்களும் அப்பா அம்மாவுக்குத் தெரியாமல், காதல் மயக்கத்தில் இருந்தால், உங்களின் எதிர்காலம் ஒன்றும் இல்லாமல் போய்விடும்" என்று கூறும் போதே காகம் அந்தக் குட்டிமீனைக் கொத்திக்கொத்தி உண்ண ஆரம்பித்தது.
இறந்தது குட்டிமீன். "அம்மா, அம்மா வலிக்கிறதே! சாகிறேன் " என்று அழுது துடிதுடித்து
பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள்" (எபே: 6:1)
பிள்ளைகளைத் தண்டித்துத் திருத்தத் தயங்காதே; பிரம்பினால் அடித்தால் சாகமாட்டார்கள். (நீமொ 23:13)
எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.
