குற்றம் காணும் கண்கள்... | அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil
அது ஒரு பெரிய காடு. காட்டின் மத்தியில் அமைதியான தியான ஒன்று இருந்தது. அங்கு வருகிறவர்களுக்கு ஞானி ஒருவர் தியானம் கொடுப்பார். ஒரு முறை சீடர்கள் பலர் அங்கு வந்து தியானம் செய்தனர். மெளனத்தைப் பற்றி, தியானம் கொடுக்கப்பட்டது. மௌனத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்ற கட்டளையும் கொடுக்கப்பட்டது.
சீடர்களில் ஒருவன், தான் மௌனத்தைக் கடைபிடிப்பதாகக் காட்டிக்கொள்ள விரும்பினான். ஞானியிடம் சென்று, "ஐயா, நான் மௌனத்தைச் சரியாகக் கடைபிடிக்கிறேன். ஆனால், நான் உணவு உண்ணும்போது என் அருகில் இருக்கும் சீடர்களில் சிலர் பேசிக்கொண்டே சாப்பிடுகிறார்கள். மெளனத்தைக் கடைபிடிப்பதில்லை. எனக்கு இது துயரமாக இருக்கிறது என்றான்." "நீயும் ஏன் அவர்களோடு சேர்ந்து பேசுவதில்லை?" என்று கேட்டு சீடனுடைய வாயை அடைத்தார் ஞானி.
அன்றிலிருந்து சீடர்கள் காலை உணவு உண்ணும்போது மறைந்திருந்து அவர்களைக் கண்காணித்தார் ஞானி. பேசிக்கொண்டே சாப்பிடுகிறவர்கள் குறைவாக நான்கு இட்லிகள் மட்டும் உண்டனர். பேசாமல் சாப்பிடுகிறவர்கள் அதிகமாக ஆறு, ஏழு இட்லிகள் உண்பதை ஞானி அறிந்து கொண்டார். அன்றிலிருந்து சீடர்கள் பேசிக்கொண்டே உணவு உண்ணலாம் என்ற கட்டளையைக் கொடுத்தார்.அதன் பயனாக அதிகமான உணவு மீதமிருந்தது. அதை ஏழைகளுக்குக் கொடுத்து மகிழ்ந்தார் ஞானி.
இரண்டாவது சீடன், தான் மற்றவர்களைவிட மிக நல்லவன், தினமும் சுறுசுறுப்பானவன் என்று காட்டிக்கொள்ள விரும்பினான். அதிகாலையில் எழுந்திருப்பான். இடங்களையெல்லாம் ஞானியின் வீட்டுக்குமுன் உள்ள செய்வான். தூய்மை தோட்டத்திலுள்ள செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவான். பாத்திரங்களை எல்லாம் கழுவி தூய்மை செய்வான்.
ஒருநாள் காலையில் சீடன் ஞானியிடம் சென்று, "ஐயா, நான் சுறுசுறுப்பானவன். தினமும் அதிகாலையில் எழுந்துவிடுகிறேன். தோட்டம் முழுவதையும் தூய்மை செய்து செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்றுகிறேன். ஆனால் மற்ற சீடர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். எந்த வேலையையும் செய்வதில்லை சோம்பேறிகள்" என்று கூறினான்.
ஞானி அவனிடம், "நீயும்போய் நிம்மதியாகத் தூங்கு. அப்போது மற்றவர்களுடைய தவறுகள், குற்றங்கள் உனக்குத் தெரியாது" என்றார்.
வாழ்க்கையில் புண்ணியம் செய்யத் தவறினாலும், மற்றவர்கள் குற்றவாளிகள் பாவிகள், கெட்டவர்கள் என்று தீர்ப்பிடக் கூடாது.
"பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்." (மத்: 7:1)
ஆண்டவர் தூய உள்ளத்தினரை விரும்புகிறார்; இன்சொல் கூறுவோர் அரசனது நட்பைப் பெறலாம். (நீமொ 22:11)
எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.
