உண்மையான பக்தன்| அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil

இளைஞன் ஒருவன் விவிலிய ஆசிரியரிடம் சென்று ''ஆயிரக்கணக்கான மக்கள் கோயில்களுக்கு திருயாத்திரையாகச் செல்கிறார்களே, அவர்களில் உண்மையான பக்தன் யார், போலியான பக்தன் யார் என்று எப்படி அறிவது?" எனக் கேட்டான். விவிலிய ஆசிரியர் கதை ஒன்றை கூறினார்.

ஒரு கிராமத்தில் பக்தன் ஒருவன் இருந்தான். தினமும் அதிகாலையில் எழுந்து அருகிலுள்ள குளத்தில் குளித்து விட்டு, நீண்ட நேரம் செபிப்பான். தன்னுடைய செபத்தில் பக்கத்து வீட்டுக்காரனைவிட மிகுந்த பணக்காரனாக ஆகவேண்டும் என்ற ஆசையும் இருந்தது. பக்தியையும் செபத்தையும் பார்த்த மக்கள் அடிக்கடி பக்தனிடம் சென்று, ஆசீர் பெறுவார்கள். இவனை 'பக்திமான்' என்று அழைத்தார்கள். இவனுடைய

ஒருநாள் கடவுள் அவனுக்குத் தோன்றி, ''பக்தா! உன் பக்தியைப் பார்த்தேன், நீ ஆசைப்பட்டுக் கேட்பதையும் அறிந்தேன். உனக்கு என்ன வேண்டும் என்று கேள். உனக்குக் கொடுக்கப்படும். ஆனால் ஒரேயொரு உனக்குக் கொடுக்கப்படுவதை விட, இரண்டு மடங்கு காரணம், அவன் நிபந்தனை. உன் பக்கத்து வீட்டுக்காரனுக்குக் கொடுக்கப்படும். காலையிலும் மாலையிலும் தொழுகை நடத்துகிறான்" என்றார்.

பக்தன் ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தான் 'நான் பத்துக்கோடி பணம் கேட்டால், பக்கத்து வீட்டுக்காரனுக்கு இருபது கோடி கிடைக்கும். நான் ஐந்து வீடுகள் கேட்டால், அவனுக்கு பத்து வீடுகள் கிடைக்கும். அதனால் என்னைவிட பணக்காரனாக மாறிவிடுவான். என்னைவிட அவன் ஏழையாக இருக்க வேண்டும். அதிகமாக துன்பப்பட வேண்டும் என்ற எண்ணத்தில், கடவுளிடம் பணமோ, வீடோ, சொத்தோ கேட்கப் போவதில்லை. மாறாக எனது ஒரு கண்ணை பிடுங்கி எடுக்கும்படி கேட்பேன். பக்கத்து வீட்டுக்காரனுக்கு இரண்டு கண்களும் எடுக்கப்படும். குருடனாகிவிடுவான்'' என்று பக்தன் முடிவு செய்தான். அவன் தன் முடிவை மனைவியிடம் கூறி ஆலோசனை கேட்டான்.

மனைவி ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, "ஐயா, வாழ்க்கையில் இரண்டு கண்களும் மிகமிகத் தேவை. பத்து சாராயப் பாட்டில்களை வாரந்தோறும் கொடுக்கும்படி கேளுங்கள். அப்போது பக்கத்து வீட்டுக்காரனுக்கு இருபது பாட்டில்களைக் கொடுப்பார். அவன் அவன் அதை குடித்துக்குடித்து குடிகாரனாக மாறிவிடுவான். சொத்தெல்லாம் அழிந்து போய்விடும்'' என்று கூறினாள். மனைவி கொடுத்த ஆலோசனை சரியாகப் பட்டது. அவளை பாராட்டினான். கண்ணுக்குப் பதிலாக கடவுளிடத்தில்

பக்தன், பக்தியோடு செபித்து தன் விருப்பத்தை வெளிப்படுத்தினான். கடவுள் பக்தன் கேட்டபடி வாரந்தோறும் பத்து பாட்டில்கள் சாராயத்தை அவனுக்கும், பக்கத்து வீட்டுக்காரனுக்கு இருபது பாட்டில்களும் கொடுக்க ஏற்பாடு செய்தார். பக்கத்து வீட்டுக்காரன் தனக்குக் கிடைத்த சாராயத்தை விற்று பணம் சம்பாதித்து பணக்காரன் ஆனான். ஆனால் பக்தன் குடித்துக் குடித்து குடிகாரனாக மாறிவிட்டான்.

கதை சொல்லி முடித்த விவிலிய ஆசிரியர் தொடர்ந்தார். "தன் வினை தன்னைச் சுடும். பிறரை அழித்துவிட நினைத்தால், நாம் அழிந்து போவோம்". இதைக் கூறிய பின், விவிலியத்திலிருந்து சரித்திர நிகழ்வு ஒன்றைக் கூறினார்.

சாலமோன் அரசர் என்பவர் இஸ்ரயேல் மக்களை கி.மு.970 லிருந்து 40 ஆண்டுகள் ஆண்டு வந்தார்.கடவுள் பக்தர். குற்றமற்றவராக கடவுளின் பார்வையில் காணப்பட்டார். கடவுள் அவர்மீது அன்பு கொண்டு அவரிடத்தில், "சாலமோனே, உன்னுடைய பக்தி, தூய்மையான வாழ்க்கை, நேர்மையான ஆட்சியைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன். எனவே, உனக்கு என்ன வேண்டுமென்றாலும் கேள். கொடுக்கப்படும்" என்றார்.

சாலமோன் பணத்தையோ, பொருளையோ, நீண்ட ஆயுளையோ கேட்கவில்லை. மாறாக 'நல்லது எது, தீயது எது' என்று அறியும் ஞானத்தைத் தாரும். அப்போது நான் உம்முடைய மக்களை நீதியோடும் நேர்மையோடும் ஆட்சி செய்ய முடியும்" என்று வேண்டினான். கடவுள் சாலமோன் அரசனுக்கு ஞானத்தைக் கொடுத்து ஆசீர்வதித்தார். (1 அரசர் 3:5-9)

இறைவனிடமிருந்து ஞானத்தைப் பெற்றவன், பிறர் வாழ, தான் வாழ நினைப்பவன் தான் உண்மையான பக்தன் என்று இளைஞனுக்கு பதில் கூறி முடித்தார் விவிலிய ஆசிரியர்.

எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.

Tamil Survey Popup Image