அன்பு என்னும் நூலால் பின்னப்பட்ட உறவு வலையே குடும்ப உறவு.
குடும்பத்தினரிடம் அன்பைப் செலுத்துவதும் பிரச்னைகளை மனம்விட்டுப் பேசித் தீா்த்துக்கொள்வதும் நல்ல குடும்ப அமைப்புக்கு அழகு.
புரிந்து வாழுதல் கணவன் மனைவி இருவருக்கும் மட்டுமானது அல்ல. மாறாக மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்குமான தலையாய கடமை என்பதை நமக்கு தெளிவுபடுத்தும் இந்த ஒலியோடையைக் கேட்டு மகிழுங்கள்..
உழைக்க மனமில்லாதவர்கள் உணவு உண்பது எப்படி சாத்தியமாகும்? உழைப்பை தவிர நம்மை உயர்த்துவது எதுவுமில்லை என்பதை உணர்த்தும் இந்த ஒலியோடையைக் கேட்டு மகிழுங்கள்..
ஆனால் பல அணுக்களின் இணைஇயக்கமே நாம் என்பதுதான் உண்மை. இங்ஙனம் சிந்திக்கையில் இப்பூவுலகில் தனியாக எந்த உயிரும் இயங்குவதில்லை என்பதை உணரலாம். எல்லாம் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருக்கின்றது.
கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லை. பகிர்வு என்பது சிறுவயதில் இருந்தே வரக்கூடிய பண்பாகும். அதனை நம் பிள்ளைகளின் மனதில் விதைப்போம். நாளை அது வளர்ந்து மரமாகி அனைவருக்கும் பயன் தரும்.