தாவீதின் வழிமரபில் அவன் தோன்றியிருந்தாலும் போலித்தன்மையால் நாட்டையும் நற்பெயரையும் இழந்தான் என்பதை நினவில் கொண்டு, சீடத்துவத்தில் உண்மைக்கும் தாழ்ச்சிக்கும் உரிய வாழ்வுக்கு விழைவோம்.
ஆண்டவர் இயேசு புதியதொரு பொன்விதியைத் தருகின்றார். அதுதான், “பிறர் உங்களுக்கு செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்பதாகும்.
எசாயா போன்ற இறைவாக்கினர்கள் தாயின் கருவில் இருக்கும்பொழுது தேர்ந்து கொள்ளப்பட்டவர்களாக இருந்தாலும், திருமுழுக்கு யோவான் அவரது தாய் எலிசபெத்துவின் கருவில் இருக்கும்போது தூய ஆவியினால் முற்றிலுமாக ஆட்கொள்ளப்பட்டவர் என்று லூக்கா நற்செய்தியாளர் விவரிக்கிறார் (லூக் 1: 41).
"பூமியில் செல்வங்களை சேமித்து வைக்காதீர்கள், ஏனெனில், அவை நமக்கு நிரந்தரமான செல்வங்கள் ஆகாது என்கிறார். அவை அழிவுக்கு உட்பட்டவை என்றும், பிறரால் திருடப்பட முடியும் என்கிறார்.
நமக்கும் பிறருக்கும் உண்மையாக இருக்கும்போது, புதுமைகள் வழி ஆண்டவர் அருள் வழங்குவார். ஒவ்வொரு புனிதரும் உண்மைக்குச் சான்றுபகிர்ந்தவர்கள். அவர்களின் உறவில் வாழ்வோர் பொய்மைக்கு இடம் தரலாகாது.
மக்களுடைய மற்றப் பாவங்கள், பழிப்புரைகள் அனைத்தும் மன்னிக்கப்படும்……. ஆனால், தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெற மாட்டார்” (மத் 12:31-32)
‘ஆண்டவரை அடையவேண்டுமா, அடுத்தவரை அன்பு செய்’ என்பதே இயேசுவின் வேண்டுகோள். ஆம், அடுத்தவர்மீது நாம் கொள்ளும் அன்பும் ஆண்டவர்மீது நாம் கொள்ளும் அன்புமே நம்மை பேறுபெற்றவர்கள் ஆக்கும்.