இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: “மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும். தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் - யோவான் 5-19. பிதாவும் இயேசுவும் சொல் செயல் எல்லாவற்றிலும் ஒரே மாதிரி இருந்தார்கள். தந்தை செய்தவற்றையே இயேசுவும் செய்தார்.
உங்கள் ஒவ்வொரு சந்திப்பிலும், உங்கள் சகோதரர்களிடம் ஆண்டவராகிய இயேசுவின் பிரசன்னத்தைக் கண்டறியவும், இரக்கமுள்ள கடவுளின் பிரசன்னத்தை வெளிக் காட்டவும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்
ஒன்றாகக் கனவு காணுங்கள், அனைவராலும் உருவாக்கப்பட்ட சமூகத்தில் சகமனிதர்களாகப் புதிய கனவு காணும் அனைவரரையும் மனித மாண்புடன் நடத்துங்கள் என்றும், என் வாழ்வைப் பிரதிபலிக்கும் பலரைக் கண்டு நான் பெரிதும் மகிழ்வடைகின்றேன் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல் சார்பு, தேசியம் அல்லது சமுதாயம், உடைமைகள், பிறப்பு என எந்த ஒரு அடிப்படையிலும் மனிதர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படக்கூடாது.
மாறிவரும் அல்லது மாற்றப்பட்ட காலநிலை மற்றும் நிலங்களை பயன்படுத்தும் முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் முக்கிய வெப்பமண்டல பயிர்களில் மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது.
தென்னிந்தியாவின் தமிழ்நாடு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமமான வாச்சாத்தியில் 1992 ஆம் ஆண்டு சந்தன மரக்கட்டைகளை கடத்தியதாக 18 பழங்குடியின பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 215 அரசு அதிகாரிகள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிமன்ற உத்தரவை இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை ஆணையம் வரவேற்றுள்ளது.
வெப்பநிலை அதிகரிப்பது பால் உற்பத்தி மற்றும் கால்நடைகளின் இனப்பெருக்க வளர்ச்சி விகிதத்தை குறைக்கும் மார்ச் 2022 இல், லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வெப்பநிலை அதிகரிப்பது 2085 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் வறண்ட மற்றும் பகுதி வறண்ட பகுதிகளில் பால் உற்பத்தியை 25 சதவிகிதம் குறைக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.
'நம்பிக்கையின் பயணிகள் ' என்ற கருப்பொருளுடன், 2025 ஆம் ஆண்டுக்கான ஜூபிலிக்கு தயாராகும் வேளையில் , இந்திய திருஅவை உலக திருஅவையுடன் இணைந்து பணிகளை ஆற்றி வருகிறது.
இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் (CBCI) தலைவர், பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத் அவர்கள் , ஜூலை 23-24 தேதிகளில் வடகிழக்கு இந்தியாவில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு தனது குழுவினருடன் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
மதமாற்றத் தடைச் சட்டங்களை மீறியதற்காக உத்தரப் பிரதேசத்தில் ஒரு போதகர் மற்றும் ஒரு பெண் உட்பட ஏழு கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டனர், மேலும் அவர்களின் ஜெபக்கூடம் ஜூலை 23 அன்று உத்தரப் பிரதேச காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டது.