காணாமல் போன 17 மில்லியன் கால்நடைகள் - காலநிலை மாற்றம், அரசின் கொள்கைகள் இந்திய பால் துறைக்கு மரண அடியை ஏற்படுத்தும்

வெப்பநிலை அதிகரிப்பது பால் உற்பத்தி மற்றும் கால்நடைகளின் இனப்பெருக்க வளர்ச்சி விகிதத்தை குறைக்கும் மார்ச் 2022 இல், லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வெப்பநிலை அதிகரிப்பது 2085 ஆம் ஆண்டின்  இறுதியில் இந்தியாவின் வறண்ட மற்றும் பகுதி வறண்ட பகுதிகளில் பால் உற்பத்தியை 25 சதவிகிதம் குறைக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. பாகிஸ்தானுக்குப் பிறகு (28.7 சதவீதம்) ஈரப்பதம் மற்றும் குறைந்த ஈரப்பதம் உள்ள பகுதிகளில், பால் உற்பத்தி குறைப்பு 10 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

பால் கொடுக்கும்  கறவை மாடுகள், பால் கொடுக்காத  பசுக்களுடன் ஒப்பிடும்போது வெப்ப அழுத்தத்திற்கு அதிக அளவில் ஆளாவதாக , நவம்பர் 2017  இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது . மேலும், பால் மகசூல் மற்றும் வெப்ப உற்பத்தி ஆகியவற்றுக்கு இடையே உள்ள நேர்மறையான தொடர்பு காரணமாக, குறைந்த பால் உற்பத்தி  தரும் விலங்குகளை விட அதிக பால் உற்பத்தி  தரும் பசுக்கள் வெப்ப அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளன.

வெப்ப அழுத்தமும் இனப்பெருக்க வளர்ச்சியைக்  குறைக்கிறது என்று ஆய்வு கூறுகிறது. உயர்ந்த வெப்பநிலையானது இயற்கையான முறையில் நடைபெறும்  இனச்சேர்க்கையின் திறனை பாதித்து பசுவின் கருத்தரிக்கும் திறனை பாதிக்கிறது, ஏனெனில் இது ஈஸ்ட்ரஸ் வெளிப்பாட்டின் காலம் மற்றும் தீவிரம் இரண்டையும் குறைக்கிறது. கோடை காலங்களில் கருத்தரிப்பு விகிதங்களில்  20 முதல் 30 சதவீதம் வரை குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

விவசாயிகள் ஏற்கனவே கால்நடைகளின் கருத்தரிப்பு விகிதத்தில் அதிக தோல்வியை சந்தித்து வருகின்றனர். இத்தகைய சூழலில்  டெல்லியில் வசிக்கும்  கோய்லா என்னும் விவசாயி தனது பண்ணையில் 120 கால்நடைகளை வளர்த்து, தினமும் 700 முதல் 750 லிட்டர்  வரை பால் உற்பத்தி செய்து வந்தார்,

ஆனால், கருத்தரிப்பு விகிதம் குறைந்து  வருவதால், இந்த பால் உற்பத்தியைத் தக்கவைக்க ஒவ்வொரு மாதமும் புதிய கால்நடைகளை வாங்க வேண்டியுள்ளது என்றும், இதற்கு எல்லாம் அதிக வெப்ப அழுத்தமே காரணம் என்றும் அவர் கூறுகிறார்.

"வழக்கமாக ஒவ்வொரு வருடமும் விலங்குகள் கருத்தரிக்கின்றன, ஆனால் கடந்த சில ஆண்டுகளில், அது நடக்கவில்லை.   50 சதவீதம் கால்நடைகள் ஒவ்வொரு வருடமும் கருத்தரிப்பதில்லை. மேலும் பால் எங்களின் முதன்மையான தொழிலாக இருப்பதால் அந்த எருமை மாடுகளை விற்று எங்கள் வாழ்வாதாரத்தை தொடர வேண்டும்,'' அந்த நிலையில் மட்டுமே தற்போது இருக்கிறோம் என்கிறார்.

பால் பண்ணையாளர்களின் வெளியேற்றம்

இத்துறை லாபகரமாக இல்லை என்றும், பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்றும் பால் பண்ணையாளர்கள் கூறுகின்றனர்

2023 மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில், ஹரியானா, உத்தரபிரதேசம், டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏராளமான பால் பண்ணையாளர்கள் பெரும் நஷ்டத்தில் உள்ளதாகவும், பால் தொழில் மோசமான நிலையில் இருப்பதாகவும் கூறினார். பலர் தங்கள் மந்தையின் அளவைக் குறைத்து வருகின்றனர், மேலும் சிலர் வணிகங்களை முடக்கி வருகின்றனர்.

உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில், பால் பண்ணையாளரான கபில் ஷர்மா மே 2023 இல் தனது 10 வருட  பால் பண்ணையை மூடத் தயாராகி வந்தார். அவர் தனது பல மாடுகளை சந்தையில்  விற்றுவிட்டார் அல்லது அருகில் உள்ள விவசாய மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் 200 க்கும் மேற்பட்ட கால்நடைகளை பராமரித்து வந்த கபில் சர்மா தற்போது அவரிடம்  13 கால்நடைகளை மட்டுமே வைத்திருக்கிறார். விரைவில் அவற்றையம்  விற்க திட்டமிட்டுள்ளார். மேலும் பால் பண்ணையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட தனது பால் பண்ணை நிலத்தை விற்கவும் திட்டமிட்டுள்ளார.

“செயற்கை கருவூட்டல் மற்றும் இயற்கையான முறையில் கருவுறுதல் ஆகியவற்றின் வழியாக, 50 சதவீத கன்றுகள் ஆண் மற்றும் 50 சதவீதம் பெண் கன்றுகள். இந்தக் கொள்கையின் கீழ், பெண் கால்நடைகள் வளரும். ஆண் மாடுகளை எரிசக்தியாக விவசாயத்தில் பயன்படுத்தலாம் என்பதை அரசு புறக்கணித்துள்ளது. மேலும், பசு வதை தடுப்பு விதிகளால் மாடுகளை விற்பது கடினமாகிவிட்டதால், பால் சுரக்க முடியாத அல்லது உற்பத்தி இல்லாத பசுக்களை  என்ன செய்ய முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

உத்தரபிரதேசம் உட்பட பல மாநிலங்கள் பசு பாதுகாப்புக்கு கடந்த சில ஆண்டுகளாக தீவிர ஒப்புதல் அளித்து வருகின்றன. இதனால் உற்பத்தி செய்யாத மாடுகளுக்கு பராமரிப்பு செலவை செலுத்த வேண்டியுள்ளதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பல ஏழை விவசாயிகள் மாடுகளை பராமரிக்க முடியாமல் தெருக்களில் விட்டுவிடுகிறார்கள், இதனால் தெருக்களில் கால்நடைகளின் அச்சுறுத்தல்  அதிகரிக்கிறது , அல்லது அதிக நிதியுதவி இல்லாத கௌசாலைகளில் இயற்கையாக இறந்த மாடுகளை, நகராட்சி அதிகாரிகள் மூலம் அப்புறப்படுத்த முடியாத அளவுக்கு, பசு காவலர்களின் மீதான அச்சம் நிலவுகிறது.

இந்தியாவில், மில்லியன் கணக்கான சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு பால் வளம் ஆதாரமாக உள்ளது. எனவே துறை தொடர்பான எந்த முடிவும் அரசியல் நோக்கத்துடன் மட்டும் இருக்காமல், அறிவியல் ரீதியாகவும் இருக்க வேண்டும்.

- அருள்பணி வி.ஜான்சன் SdC
(Sources from Down To Earth)