கடந்த காலம் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.11.2024
நாளையென்பது நாளையல்ல. இன்றைய செயல்கள் தான் நாளைய பிரதிபலன் என்பதையும், வாழ்க்கையில் மறுவாய்ப்புகள் வரும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
அதனால் கடந்த காலத்திலேயே உங்கள் சிந்தனையை வீணடிக்காமல் நிகழ்காலத்திற்கு உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
நீங்கள் கடந்த காலத்தில் செய்த நல்ல காரியங்களும், தீய விஷயங்களும் இனி உங்களுக்குத் தேவையில்லை.
இன்று என்ன செய்கிறீர்கள்
என்பதில் தான் இருக்கிறது மாற்றம். கடந்த காலப் பெருமையும், சிறுமையும் பயன் தராது. ஆகையால் எண்ணங்களை உயரத்தில் வை.
சிறு சிறு சந்தர்ப்பங்களும் தெளிவாகத் தெரியும். போராட்டங்களையெல்லாம் ஏற்றுக் கொள்ளவும். நமக்கு ஏற்றதாக மாற்றிக் கொள்ளவும் பழகினாலே போதும்.
வாழ்க்கை பூந்தோட்டம் ஆகும் வெற்றியும் நிச்சயம் ஆகும்.
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் வாழ்வும் வளமும் நிம்மதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் தாய் அருள் நிறைந்த மரியே.
மரியே வாழ்க
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி