வாழ்வை வாழ்ந்திட | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 14.03.2024

வாழச் சொல்லித் தருகிறேன்
வா மனிதா
வாழ்க்கை என்பது உறக்கத்திற்கும் மரணத்திற்கும் மத்தியில் கண்டு வரும் கனவல்ல
அக விழிப்பிற்கும், ஆன்ம உணர்விற்கும் இடையே அரங்கேறும் கலைக்களஞ்சியம்
அக்கலைக் களஞ்சியத்தின் கணைகளில் முக்கியப்பங்கு கவிதைகள்
கவிதைகள் பிறக்க இயற்கை ரசிப்பு அவசியம்
இயற்கை ரசிக்க வைக்கின்றன
கவிதைகள் வாழ வைக்கின்றன
பூமியை மேடையாக்கி
மழையை தோரணமாக்கி
பகலவனை விளக்காக்கி
காற்றை இசையாக்கி
ஆகாயத்தை அரியாசனம் ஆக்கி
வாழப் பிறந்த பிறப்பு இப்பிறப்பு
மானுடப் பயணத்திற்கு இரண்டு வேலை
சாலை போடுவதும் அதுவே
சக்கரமாவதும் அதுவே
பறவைகளைப் பெயர் சொல்லி அழைத்து
மொட்டுகள் மலர்வதை உற்றுநோக்கி
நீரோடையின் சத்தத்திற்கு பாஷை கண்டு பிடித்து
வாழ்க்கை எங்கங்கே தங்கியிருக்கிது எனக் கண்டறியும்
அனுபவங்களை இந்த பிரபஞ்சத்தை நோக்கி பிரகடனம் செய்யும்
அற்புத பிறப்பல்லவா இம் மானுடப்பிறப்பு
வாழப் பழகி
வாழந்து களிப்போம்
வாழ்க்கை வாழ்வதற்கே
வாழ்க வாஞ்சையுடன்
வாழ்வின் ரசனையில்
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் நம்பிக்கையும் அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறை இயேசுவே.
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி
Daily Program
