சமநிலை பெற சகலமும் மாறும்!! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 18.06.2024

பூமியில் பிறந்தமுதல்
தேடுதலை தொடர்கிறான் மனிதன்!

வெற்றியை வெறித்தனமாகவும்
செல்வத்தை குறுகிய குறுக்குவழிகளிலும்

தன்னை மீறிய சுயநலத்திற்காக
தனக்கு கீழேயுள்ள பிற உயிர்களை வேட்டையாடி கொல்கிறான்!

சகமனிதனை 
அடிப்படையிலிருந்து அடிமைத்தனம் செய்து சாதிய பார்வையில்முற்படுத்துகையில் 
தான் வாழும்வரை
சாதி எனும் போதைவாழ்வை வாழ்கிறான்!

பல ஆளுமைகள்.
பல யுத்தங்கள்
எத்தனையோ சதிகள்! 
பல உயிர்களின்பலி!

இத்தனையும் செய்தது எதற்காக?

இந்த அழகான பூமியில் வாழவா?
இல்லை நீ தனியாக உன்
இனத்திற்காக மட்டுமேஆள!

அதுதானே இன்றுவரை நிகழ்கிறது?

வெடிக்கும் வரை எரிமலையின்
சாந்தம் புத்தனைப்போன்றது!

எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ
இயற்கை வழி வகுக்கும் பொழுது
உன் கூட்டங்கள் கழிக்கப்படும்!

சமநிலை பெற சகலமும் மாறும்!!

சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி