திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள் ! | Veritas Tamil
பாமென்டா, கேமரூனின் வடமேற்கு பகுதியில் அமைந்த முக்கிய நகரமாகும். இது மலைப்பாங்கான நில அமைப்பு, குளிர்ந்த காலநிலை மற்றும் தனித்துவமான பண்பாட்டிற்காக அறியப்படுகிறது.
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கான திருத்தூதுப் பயணத்தின் நான்காம் நாள் ஏப்ரல் 16 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தொடங்கியது.
காலை மணி 10:05 க்கு யவுண்டே நகரின் யாவுண்டே-என்சிமாலென் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, கேமரூனின் மற்றொரு முக்கியமான நகரமான பாமென்டாவுக்குச் செல்கிறார். முற்பகல் 11 மணிக்கு பாமென்டா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து இறங்குகிறார். அங்கு அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது .
பாமென்டா, கேமரூனின் வடமேற்கு பகுதியில் அமைந்த முக்கிய நகரமாகும். இது மலைப்பாங்கான நில அமைப்பு, குளிர்ந்த காலநிலை மற்றும் தனித்துவமான பண்பாட்டிற்காக அறியப்படுகிறது. டிகார் மற்றும் பிற பூர்வீக மக்கள் முதலில் இங்கு வாழ்ந்தனர். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜெர்மன் காலனித்துவ ஆட்சியில் முக்கியமான மையமாக வளர்ந்தது. முதல் உலகப் போருக்குப் பிறகு பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்டது. இப்போது ஆங்கில மொழிப் பகுதிகளின் அரசியல் மற்றும் பண்பாட்டு மையமாக உள்ளது.
பாமெண்டா “Grassfields” கிராஸ்பீல்டுஸ் எனப்படும் பண்பாட்டு பகுதியின் ஒரு பகுதியாகும். இசைஇ நடனம்இ வண்ணமயமான விழாக்கள் இங்குள்ள சிறப்புகள். பாரம்பரிய தலைவர்கள் (Fon) சமூக வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கைவினை, கதைகள் மற்றும் வாய்மொழி மரபுகள் இன்னும் இங்கு நிலைத்திருக்கின்றன. சந்தைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இந்த நகரம் வளர்ந்து வருகிறது.
பாமெண்டா மலைப்பகுதிகள் மற்றும் அழகிய காட்சிகளுக்குப் பெயர்பெற்றது. கேமரூனின் மற்ற பகுதிகளை விட குளிர்ந்த மற்றும் சீரான காலநிலை கொண்டது. பாமெண்டா மலைப்பகுதிகள் மற்றும் எஸ்கார்ப்மெண்ட் காட்சிகளுக்கு அதாவது, பாறைச் சுவர் போலத் தோன்றும். மலை ஓரம் நிறைந்த இயற்கைக் காட்சிக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை எனலாம். காபி, சோளம், காய்கறிகள் போன்ற விவசாயம் முக்கியமானதாக பயிரிடப்படுகிறது.
பாமெண்டா என்பது கேமரூன் நாட்டில் கத்தோலிக்க நம்பிக்கை மிகவும் வலிமையாக காணப்படும் நகரங்களில் ஒன்றாகும். உலக திருஅவையின் பாதுகாவலரான புனித யோசேப்புக்கு அர்ப்பணிக்கப்பட்ட பேராலயம் பாமெண்டா உயர் மறைமாவட்டத்தின் மையமாக உள்ளது. பாமெண்டா உயர்மறைமாவட்டம் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக சேவைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல பள்ளிகள், சிறுபள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பங்குகள் செயல்படுகின்றன. ஆயிரக்கணக்கான நம்பிக்கையாளர்களின் ஆன்மீக வாழ்வை வழிநடத்துகிறது. இளைஞர் இயக்கங்கள், திருஅவை சேவைகள், இறையழைத்தல் வளர்ச்சியில் முக்கிய மையம். மக்கள் திருப்பலி, செபம் மற்றும் திருஅவை இயக்கங்களில் உற்சாகமாக பங்கேற்றனர் .
பாமெண்டா ஆன்மீக உற்சாகம் நிறைந்த ஆயகமாக அறியப்படுகிறது. ஆயர்கள் மற்றும் அருட்தந்தையர்கள் சமூக நீதி மற்றும் ஒற்றுமைக்கான குரலாக இருக்கின்றனர். குறிப்பாக பாமெண்டோ உயர்மறைமாவட்டம் அமைதி மற்றும் சமரச முயற்சிகளில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.
பிற்பகல் மணி 11:30 க்கு பாமெண்டோ உயர்மறைமாவட்டத்தின் புனித யோசேப்பு பேராலயத்தில் அமைதிக்கானக் கூட்டத்தில் பங்கேற்றார் . இந்த பேராலயம் வரலாற்று சிறப்புமிக்கது. காமரூனின் வடமேற்கு பகுதியில் கத்தோலிக்க வளர்ச்சியின் அடையாளமாக உள்ளது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் கத்தோலிக்க மறைப்பணியாளர்களின் சேவையுடன் இந்த பேராலயத்தின் வரலாறு தொடங்குகிறது. குறிப்பாக (Mill Hill) மில் கில் மறைப்பணியாளர்கள் கிறிஸ்தவத்தை பரப்ப முக்கிய பங்கு வகித்தனர்.
கத்தோலிக்க மக்கள் அதிகரித்ததால், ஒரு மைய ஆலயம் தேவையானது. எனவே இது ஒரு மையமாகக் தொடங்கப்பட்டது. அதன்பின் மைய ஆலயமாக வளர்ந்தது. பின்னர் இது பேராயர் அமரும் பேராலயமாக உயர்ந்தது. இந்த பேராலயம் நவீன கட்டிட வடிவமைப்பு மற்றும் உள்ளூர் பண்பாட்டின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது. இம்மக்களின் திருவிழாக்கள், திருப்பணியாளர் அர்ப்பணிப்பு, திருஅவையின் முக்கிய நிகழ்வுகளின் மையமாக திகழ்கின்றது. எனவே தான் திருத்தந்தையின் வருகையின்போது இந்த பேராலயத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருத்தந்தையின் அமைதிக்கூட்டம் நிறைவுற்றபின்,
பிற்பகல் மணி 3:15 க்கு பாமென்டா சர்வதேச விமான நிலையத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார். பின்னர் மாலை மணி 6:20க்கு பாமென்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு யாவுண்டேக்கு செல்கிறார்.
நன்றி வத்திக்கான் செய்தி