சிரோ-மலபார் ஆயர்கள்: திருத்தந்தை அவர்களை இந்தியாவிற்கு அழைக்க வேண்டுகோள் – பிரதமர் மோடிக்கு மனு! | Veritas Tamil
சிரோ-மலபார் ஆயர்கள்: திருத்தந்தை அவர்களை இந்தியா வர அழைக்க வேண்டுகோள் – பிரதமர் மோடிக்கு மனு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 2025 நவம்பர் 4 சிரோ-மலபார் திருச்சபையின் தலைவர்களான மേജர் ஆர்க்பிஷப் ரபாயேல் தாட்டில் மற்றும் மூத்த ஆயர்களை சந்தித்தார்.
நவம்பர் 4 அன்று பிரதமர் நரேந்திர மோடி, சிரோ-மலபார் கத்தோலிக்க திருச்சபை தலைமையினரை — மேதகு பேராயர் மார்ஆரபாயேல் தாட்டில், பேராயர் டாக்டர் குரியக்கோஸ் பாரனிக்குளங்கராவும் மற்றும் பிற முதிர்ந்த ஆயர்கள் — ஆகியோரை சந்தித்தார்.
இந்த சந்திப்பை ‘X’ (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்த பிரதமர், “சிறந்த உரையாடல் நடந்தது. மேதகு பேராயர் . மார்ஆரபாயேல் தாட்டிலும், மேதகு பேராயர் டாக்டர் குரியக்கோஸ் பாரனிக்குளங்கராவும் மற்றும் பிறர் உடனும் சந்தித்து பேசினேன்” என்று பதிவிட்டார்.
பேராயர் மார்ஆர்க்பிஷப் ரபாயேல் தாட்டில் தலைமையிலான இந்த பிரதிநிதி குழுவில், பறிதாபாத் மறைமாவட்டத்தின்
பேராயர் மார்குரியக்கோஸ்
பாரனிக்குளங்கராவும் சிரோ-மலபார் திருச்சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல மூத்த ஆலயப்பணியாளர்களும் இருந்தனர்.
கூட்டாட்சி இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்ததாவது: “பிரதமர் கவனமாக கேட்டார். அனைத்து விஷயங்களையும் விவாதிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்று அவர் உறுதியளித்தார்.”
அவர் மேலும் கூறினார்: “நாம் எந்த விஷயத்தையும் மதக்கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை.
இந்த சந்திப்பில், திருத்தந்தை பதினான்காம் லியோவை இந்தியா வர அழைக்குமாறு, நீண்டநாள் கனவாக இருந்த கோரிக்கையை ஆயர்கள் எழுத்து மூலம் பிரதமரிடம் முன்வைத்தனர். இது நாட்டின் கத்தோலிக்க சமூகத்தினரின் ஆவலான விருப்பமாகும்.
கிறிஸ்தவர் சிறுபான்மை நலன், சமூக ஒற்றுமை மற்றும் கல்வி-வளர்ச்சித் துறைகளில் திருச்சபையின் பங்களிப்பு போன்ற பல விடயங்களும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டன.
இறுதியாக,இந்த சந்திப்பு, இந்திய தேசிய ஒருமைப்பாட்டையும்
கத்தோலிக்க திருச்சபையையும் இணைக்கும் உரையாடலாக அமைத்தது.ஒத்துழைப்பின் உயர்ந்து வரும் மனப்பான்மையை காட்டுகிறது. இது பொதுநலனுக்கும், தேசிய ஒற்றுமைக்கும் இருபுறமும் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது.