நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான ஜூபிலி நிகழ்ச்சியை நடத்திய இம்பால் மறைமாவட்டம்

ஏப்ரல் 6, 2025 அன்று, வடகிழக்கு இந்தியாவில் நர்சிங் கல்லூரி ஆடிட்டோரியத்தில் உள்ள கத்தோலிக்க மருத்துவ மையத்தில் (CMC) நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்பு ஜூபிலி நிகழ்ச்சியை நடத்தியது இம்பால் மறைமாவட்டம்.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட 15 சுகாதார வல்லுநர்கள் உட்பட சுமார் 150 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், இம்பாலின் பேராயர் லினஸ் நெலி மற்றும் இம்பாலின் எமரிட்டஸ் பேராயர் டொமினிக் லுமோன் போன்ற மதிப்புமிக்க  ஆயர்களும், ஏழு அருட்தந்தையர்கள்மற்றும் 19 அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர்.

காலை 10:00 மணிக்கு, CMC நர்சிங் கல்லூரியின் பாடல் பாடி மற்றும் விளக்கு ஏற்றி இந்த விழா தொடங்கியது.CMC இன் இயக்குனர் அருட்தந்தை கும்லோ டாங்ஷெல் அனல், நிகழ்வுகளைத் தொடங்கி வரவேற்பு உரையை நிகழ்த்தினார். பிராந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (RIMS) ஊழியர்களின் குழுப் பாடல், நட்புறவை மேலும் வளர்த்தது.

CBCI சுகாதார ஆணையத்தின் செயலாளர் அருட்தந்தை இவான் சந்தோஷ் டயஸ், "கத்தோலிக்க திருச்சபைக்கான சுகாதாரப் பராமரிப்பு என்பது ஒரு திருத்தூதுப் பணி, வெறும் தொழில் அல்ல" என்று கூறி, நம்பிக்கை அடிப்படையிலான சூழலில் சுகாதாரப் பராமரிப்பின் சேவை சார்ந்த மற்றும் நெறிமுறை பரிமாணங்களை எடுத்துக்காட்டும் ஒரு நுண்ணறிவுமிக்க உரையை நிகழ்த்தினார். 

அவங்குல் அருட்தந்தை டி.எஸ். டொமினிக், "மருத்துவ நிபுணர்களின் ஒழுக்கம் மற்றும் நெறிமுறை நடைமுறைகள்" என்ற தலைப்பில் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார், இது சுகாதார நிபுணர்களுக்கான அத்தியாவசிய நெறிமுறைக் கருத்துக்களை வலியுறுத்துகிறது. பிற்பகல் அமர்வு பேராயர் லினஸ் நெலி தலைமையிலான புனித நற்கருணை ஆராதனையுடன் நிறைவடைந்தது, இது நோயாளிகளுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் ஆன்மீக சிந்தனையின் ஒரு தருணத்தை வழங்கியது.

ஆயுஷ் மாநில நோடல் அதிகாரி டாக்டர் பெனடிக்ட் நன்றி தெரிவிக்கும் உரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது. விழா நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள், பேச்சாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.