கிட்னி தானம்  - அண்ணனுக்கு தம்பி | Veritas Tamil

கிட்னி தானம்  - அண்ணனுக்கு தம்பி 

சிங்கப்பூரில் அருட்பணியாளர்களாக  பணியாற்றும் ஒரே குடும்பத்தைச் சார்ந்த இரு சகோதரர்களில் தம்பி தனது அண்ணனுக்கு கிட்டியை தானம் செய்து அன்பின் உச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பின்  இருவரும் குணமடைந்து வருகின்றனர்.

செப்டம்பர் 3, 2025 அன்று, மூத்த சகோதரர் பிதா ஏட்ரியன் யோவிற்கு, அவரது தம்பி பிதா இக்னேஷியஸ் யோ சிறுநீரகத்தை தானமாக வழங்கினார். தற்போது இருவரும் சிகிச்சைக்குப் பின் ஓய்வு மனைவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செப்டம்பர் 10 அன்று திருக்குடும்ப ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி பிதா ஏட்ரியன் தனது முகநூலில் நன்றி தெரிவித்து, “நான் நன்றாக குணமடைந்துள்ளேன். இப்போது சில மாதங்கள் ஓய்வு எடுத்து முழுமையாக குணமடையும் வரை நர்சிங் ஹோமில் உள்ளேன். எங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கவும்இ” என்று எழுதியுள்ளார்.

மற்றொரு பங்குதந்தையான புனித அந்தோனியார் ஆலயத்தின் பங்குதந்தை  பிதா இக்னேஷியஸ் தனது ஆலய முகநூல் பக்கத்தில், செப்டம்பர் 5 வெள்ளிக்கிழமை, இயேசுவின் திருஇருதயத்துக்கு நன்றி திருப்பலி செலுத்தியதாகவும், “சிகிச்சை நேரத்தில் என் அண்ணனுக்கும் எனக்கும் கிடைத்த அற்புதமான  செயல்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறினர்.தங்களுக்காக ஜெபித்த அனைவருக்கும், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், பராமரிப்பாளர்களுக்கும் நன்றி கூறியதோடு அனைவரையும் இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கவும் வாழ்த்தினார்.

இந்த அறுவை சிகிச்சைக்கு முன்னர், சிங்கப்பூர் மறைமாவட்டத்தில் உள்ள பல கத்தோலிக்கர்கள் சிறப்பு திருப்பலி மற்றும்  ஜெபக் கூட்டங்களை நடத்தி, அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடைபெற செபித்தனர்.