மனித நேயத்தின் வெளிப்பாடும் படைப்பின் மீதான அக்கறையும் - திருத்தந்தை | Veritas Tamil

மனித நேயத்தின் வெளிப்பாடாக அமையும் படைப்பின் மீதான அக்கறை - திருத்தந்தை.
செப்டம்பர் 26, 2025: உலகில் மிகவும் பாதிப்படையக் கூடியவர்களாக இருப்பவர்கள் கால நிலை மாற்றம், காடழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் பேரழிவினால் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று குறுஞ்செய்தி ஒன்றில் சுட்டிக்க்காட்டியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
செப்டம்பர் 25, வியாழனன்று படைப்பிற்கான காலம் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை தனது எக்ஸ் வலைதளப்பகத்தில் பதிவிட்டுள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், படைப்பிற்கான செப நாள் மற்றும் காலம் என்பது ஆண்டுதோறும் செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 4 வரை சிறப்பிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு இச்செய்தியினை வெளியிட்டுள்ளார்.
படைப்பின் மீதான நமது அக்கறையானது நம்பிக்கை மற்றும் மனித நேயத்தின் வெளிப்பாடாக அமைகின்றது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், படைப்பிற்கான அக்கறையும் அமைதியும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை என்பதை இச்செய்தியின் வழியாக வலியுறுத்தியுள்ளார்.
Daily Program
