பசுமை பயணம் - மிதிவண்டி ஓட்டும் தோழர்கள் | Veritas Tamil
பசுமை பயணம் - மிதிவண்டி ஓட்டும் தோழர்கள்
12.11.2025 தன் உயிர் காக்கும் பசுமை பயணத்தின் எட்டாம் நாள் தஞ்சாவூரில் உள்ள விளாரூரில் தொடக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தஞ்சாவூர் ஆயர் சகாயராஜ், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா, நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, ஆணையர் கண்ணன், சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, துணைப் பொது மேலாளர் ஜோதி கணேஷ், தமிழக துறவியர் பேரவையின் தலைவர் அருட்சகோதிரி பிலோ மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளி மாணவர்கள் பான் செக்கர்ஸ் கல்லூரி மாணவிகள் பொதுமக்கள் மற்றும் பசுமை பயண வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறப்பு இந்த அனைவரையும் சிறப்பித்த பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி அவர்கள் பசுமை பயண வீரர்களை வாழ்த்தி இயற்கை முக்கியத்துவத்தை பற்றியும் வருங்கால தலைமுறையினர் வாழ வேண்டும் என்றால் இயற்கையை அவசியம் என்றும் கூறி பசுமைப் பயண வீரர்களை சிறப்பித்தார் அதன் பிறகு சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. 11 மணி அளவில் திருக்கனூர் பட்டி என்ற பகுதியில் சுமார் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன அங்கு பசுமைப் பயண வீரர்களும் அருட் சகோதரிகளும் பான் செக்கஸ் கல்லூரியின் மாணவிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
3.00 மணி அளவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தொடங்கி பேரறிஞர் அண்ணா அரங்கம் வரை மாணவர்களும் பசுமைப் பயண வீரர்களும் பேரணியாக சென்றனர் இதனை காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் அவர்கள் கொடியாசித்து துவங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து அண்ணா நூற்றாண்ட அரங்கத்தில் நிறைவு விழா நடைபெற்றது அதில் ஆயர் அவர்கள் சிறப்புரையாற்றினார் இளைஞர்கள் கையில் எதிர்காலம் உள்ளது என்றும் இளைஞர்கள் நினைத்தால் இயற்கை காப்பாற்ற முடியும் என்றும் அவர் கூறினார் அதனை தொடர்ந்து பசுமைப் பயண வீரர்களை இயற்கை காப்போம் வாழ்வுரிமை மீட்போம் என்ற வீதி நாடகத்தை அரங்கேற்றினர் அதனை தொடர்ந்து பசுமைப் பயன் அவர்கள் தங்களது பயணத்தை தொடர்ந்து கும்பகோணத்தில் ஆறு மணி அளவில் இரை பராமரிப்பு அன்னை ஆலயத்தில் பொதுமக்களால் வரவேற்கப்பட்டனர் அங்கிருந்து பங்கு மக்கள் மற்றும் பசுமை பயண வீரர்கள் மிதிவண்டியின் மூலம் பேரணியாக இதயா கல்லூரி வந்தடைந்தனர். நிலத்தை காக்கும் பயணம் நாளை சிதம்பரம் நோக்கி.....