உழவும், உழவனும் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 22.07.2024

உற்பத்தி என்கிற மாயை

தாம் விளைவித்த பொருளை 
தூக்கிக் கொண்டு விற்க ஓடுவது 
வீண் வேலை. 
இப்படி செய்வதால் 
வேண்டிய விலை 
கிடைக்காது. 
சுமந்த கூலி கூட 
கிடைக்காது சில நேரம். 
வலியும் வேதனையும், 
வேளாண்மை மீது 
வெறுப்பும் கூட வரும்.

நஞ்சில்லாத உணவை உனக்கும், 
உன் குடும்பத்திற்கும் உறுதி செய்வோம் முதலில். 
பிழைத்திருக்க வேண்டியது முதன்மை.
பின்பு விற்பனை பற்றி விவாதிக்கலாம்.  
நல்ல உணவு  தேவை என எண்ணுபவர் 
தேடி வந்து வாங்க வேண்டியதே 
நிலையை சமன் செய்யும்.
அதுவரை அமைதியாக ஆராதிக்கலாம் உழவை.
பிற தேவைகளுக்கு பணம் வேண்டுமே எனில் 
பிற தொழில்களில் தான் வரும்.

விவசாயத்தில் பெரும் பணம் வராது 
என்பது  எண்ணற்ற முறை 
நிரூபிக்க பட்டுள்ளது .
அரசும், 
விவசாயத்துறையும், 
நிறுவனங்களும், 
நுகர்வு  சமூகமும்,
உழவனை நெட்டி தள்ளும்  
உற்பத்தி என்னும் 
புதைகுழியில். 

ஏன் ?
அவர்களுக்கு 
தேவையான உணவ தட்டில் 
தானே வந்து விழ வேண்டும் . 
எந்நேரமும் கிடைக்க வேண்டும். 
எளிதாக கிடைக்க வேண்டும் .
மலிவான விலையில் கிடைக்க வேண்டும் .

மானியம், 
இலவசம், 
வங்கி கடன், 
பயிர் கடன், 
என சின்ன மீன்கள்  
வீசப்படும் உழவனை நோக்கி. 
உழவனின் பெரும் 
உழைப்பு என்னும் 
பெரிய மீனை பிடிக்க 
என்பதை உழவன் உணர்வது எப்போது ?
உணர்ந்தாலும்,  
வலையில் இருந்து விடுபடுவது எப்படி?

உழவர் சந்தைகள், 
குறைந்த பட்ச ஆதார விலை, 
நாட்டின் எந்த மூலையில் சென்றும் விற்பனை,  
போன்றவை ஏமாற்று வேலை.
உற்பத்தி என்கிற 
மாயையில் இருந்து விடுபடுவது எப்போது?
நம்பிக்கை நலிவடைகிறது!! 

உணவுக்கு வேளாண்மை  
-சாமானியன்

ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி