திருத்தந்தை, செவ்வழி நடத்தும் ஆயன்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் 6ஆம் வாரம் –சனி
திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம்- விழா

முதல் பேதுரு 5: 1-4
மத்தேயு  16: 13-19

 
திருத்தந்தை, செவ்வழி நடத்தும் ஆயன்!
 
 முதல் வாசகம்.

இன்று புனித பேதுருவின் தலைமைப் பீட விழாவைக் கொண்டாடுகிறாம்.  மண்ணகத் திருஅவையின்  தலைவராக  அதிகாரத்தையும் பொறுப்பையும் இவர் இன்றும் பிரதிபலிக்கிறார்.   புனித பேதுரு இன்றைய முதல் வாசகத்தில் அவர் தேர்ந்துகொண்ட மற்ற திருஅவை  தலைவர்களிடம் உரையாற்றி, அவர்களை மந்தையின் மேய்ப்பர்களாக இருக்க பணிக்கிறார். 
புனித பேதுருவின் முதல் திருமுகத்தின் வரும் இன்றைய  வாசகத்தில், அவர் தனது பணியாளர்களோடு  உரையாற்றுகிறார்.  அவர்கள் தலைவர்களாக தங்கள் கடமைகளை விருப்பம், உற்சாகம் மற்றும் பணிவுடன் செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.  
திருஅவை வரலாற்றின்  ஆரம்பக் காலத்தில் கூட, சில தலைவர்கள்  தலைவர்களாக தங்கள் நிலைப்பாட்டை வாழ்வதில் துரோகம் செய்ததாக தெரிகிறது. மற்றவர்கள் தங்கள் அழைப்பைத் தங்கள் சொந்த நலனுக்காக பயன்படுத்தி இருக்காலம்.   இன்னும் சிலர் சர்வாதிகாரிகளாகச் செயல்பட்டு மக்களை அடக்கி ஆண்டிருக்கலாம்.  எனவே, இத்தகையோர் ஆண்டவராகிய இயேசுவுக்குப்  பதிலளிக்க வேண்டும் என்று பேதுரு அவர்களுக்கு நினைவூட்டுகிறார்.   

நற்செய்தி.

இன்றைய நற்செய்தி என்பது இரண்டு நாட்களுக்கு முன்பு வாசிக்கப்பட்ட மாற்கு எழுதிய நற்செய்திக்கு இணையான மத்தேயுவின் விபரமாகும்.   இந்த நற்செய்தியில், மக்கள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று சீடர்களிடம் இயேசு கேட்ட பிறகு, அவர் யார் என்று சீடர்களிடம் கேட்கிறார்.  பேதுரு இயேசுவை மெசியா அதாவது  கிறிஸ்து,  அருள்பொழிவு செய்யப்பட்டவர், மற்றும் வாழும் கடவுளின் மகன் என்று தைரியமாக அறிவிக்கிறார்.    இயேசு சீமோனுக்கு பேதுரு (பாறை) என்று பெயர் சூட்டி,  திருஅவைக்கு முதன்மை தலைவாரக் நியமிக்கிறார். நிறைவாக, அவருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கி, ‘விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்று வாழ்த்துகிறார்.

சிநுதனைக்கு.

முதலில், இப்போது  தீவிர நுரையீரல் அழற்சி நோயிற்காக  மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவரகள் நலம் பெற்று இல்லம் திரும்ப ஆண்டவரிடம்  மன்றாடுவோம். 
உண்மையில் ‘திருத்தந்தை’ பொறுப்பு என்பது எளிதான ஒன்றல்ல.      திருஅவையின்  வரலாற்றில் இப்போதிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  266-வது திருத்தந்தையாவார்.   ஒவ்வொரு திருத்தந்தையரின் தலைமை பீடத்தின் கீழ்  திருஅவை பயணித்து வருகிறது.  இது முற்றிலும் ஆண்டவரின் திட்டத்திற்கு உட்பட்டது. 
 பல நூற்றாண்டுகளாக  பல மனிதர்க்ள, அரசர்கள் தோற்றுவித்த நிறுவங்களும் அரசுகளும் மறைந்து போயின. அவற்றுள் அற்றல் மிக்கதாக இன்றும்  உள்ளது கத்தோலிக்கத் தாய் திருஅவை.   ஏனெனில் அது பாறை மீது எழுப்பப்பட்டது. 
நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' என்னும் இயேசுவின் கேள்விக்கு, 'நீர் மெசியா' எனப் பதில் தருகின்றார் பேதுரு. இது பேதுரு அவராக அல்ல, தூய ஆவியாரின் தூண்டுதலில் வெளிப்பட்ட அறிக்கை. 
ஆனால், இன்று, இந்த வயிதில் இயேசு எனக்கு யார்? என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டிய சூயலில்  சிக்கியுள்ளோம்.  புனித பேதுரு இன்றைய முதல் வாசகத்தில் மற்ற திருஅவை  தலைவர்களிடம் உரையாற்றி, அவர்களை மந்தையின் மேய்ப்பர்களாக இருக்க பணிக்கிறார் என்று அறிந்தோம்.  
இன்று நாம் பேதுருவின் தலைமைப் பீட விழாவைக் கொண்டாடுகிறதினால்  ஆண்டவர் இயேசு, பேதுருவுக்குக் கொடுத்த ஆட்சியுரிமையை, அதிகாரத்தை சிறப்பாக நினைவுகூர வேணேடும். 
நமது திருமுழுக்காலும் உறுதி பூசுதலாலம் நாமும் மேய்ப்பர்களால பணியாற்ற பணிக்கப்பட்டுள்ளோம். ஆனால் அது உறுதிபூசுதலோடு மறக்கப்படுகிறது. அது நமது பலவீனம் என்று  தப்பித்துக் கொள்கிறோம்.
பேதுரு (பாறை)  உறுதியானவர் என்பதே நமது எண்ணம். அதுவும்  தவறு. அவருக்கும் பலவீனம் இருந்தது. ஆனாலும் அதை உணர்ந்த வேளையில் அவர் தன்னைத் தேற்றிக்கொண்டு, இறுதிவரை இயேசுவுக்குப் பிரமாணிக்கமாயிருந்தார். ஒரு கிறிஸதவரின் வாழ்வில் பிரமாணிக்கம் தவறாமை ஒரு முக்கிய பண்பாகும்.  அதிலும் திருஅவைக்குப் பிரமாணிக்கமாயிருப்பது நம்மில் ஆண்டவரின் எதிர்ப்பார்ப்பாகும். கேட்பார் பேச்சை கேட்டு சபைக்குச் சபை தாவுவோர் வெறும் ஏமாளிகளே. இக்கறை மாட்டுக்கு அக்கறை பச்சை போல் தோன்றுமேயொழிய அது உண்மையாக இருக்காது. ஏனெனில் இயேசு ஒருபோது தம் உடாகிய திருஅவையைக் கூறு போடமாட்டார். 
ஒரே ஆயர், ஒரே மந்தை என்றிருக்க, ஒரே திருத்தந்தையின் கீழ் ஒன்றிந்திருப்பதும், பயணிப்பதும் நமது விருப்பம் அல்ல, தலைமை ஆயரான இயேசு கிறிஸ்துவின் விருப்பம். ஆகவே, பேதுருவின் தலைமைபீட விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், நாம் திருஅவையின் ஈராயிரம் ஆண்டு  திருமரபிற்கு தகுந்த மரியாதை செலுத்துவோம். விண்ணக்த்தின் திறவுகோளைக் கொண்டிருப்பவர் பேதுரு.

இறைவேண்டல்.

ஆண்டவரே, நான் உம்மை அன்பு செய்கிறேன். நீர் தேர்ந்தெடுக்கும் வழியில் நான் உமக்கு பணிபுரியவும் உமது அரசை  மேலும் மேம்படுத்தவும் எனக்குத் துணைபுரிவீராக. ஆமென்.


 

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452