"என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொள்..." என்று இயேசு கூறுகிறார். ‘நுகம்' என்பது இரு காளைகளின் பிடரியில் வைக்கப்பட்டு வண்டியோடு இணைக்கப்படும் ஒரு மரக் கருவி. மாடுகள் வண்டியை இழுத்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த நுகம் அதிக எடையுள்ளதாக இருந்தால் மாடுகள் தள்ளாடும்.
அவ்வாறே, அதிகபடியான துன்பத்தால் அல்லலுவோரை இயேசு அழைக்கிறார்.
நமக்கு அருளப்பட்ட அனைத்துக் கொடைகளுக்கும், திறன்களுக்கும் இறைபுகழ் கூற வேண்டும். ‘எல்லாப் புகழும் மாட்சியும் தந்தைக்கே’ என்று வாயார, மனதார கூறுவோமானால், நாளுக்கு நாள் நமது தன்முனைப்பு குறையும். சிறந்த சீடத்துவத்திற்கு இப்பண்பு இன்றியமையாதது.
கிறிஸ்தவர்களாகிய நமது வாழ்க்கைப் பயணத்திற்கு ஒளியாக இறைவார்த்தைத் உண்டு. இறைவார்த்தையின் வழியாக நாம் கடவுளிடமிருந்து பல்வேறு நன்னெறி போதனைகளைப் பெறுகிறோம். நமது மறைக்கல்வி, மறையுரைகள் அனைத்தும் இறைமக்களாக வாழ நல்வழிக்காட்டுகின்றன.
கடவுள் பராமரிக்கும் வானத்துப் பறவைகளைவிட அவரது பணியாளர்களின் முக்கியத்துவம் மிக உயர்ந்தது எனச் சுட்டிக்காட்டும் இயேசு, கடவுள் தம் பணியாளர்களுக்கு கேடயமும் கவசமுமாமக உள்ளார்
இஸ்ரயேலர் கடவுளிடம் திரும்பி வந்தால், அவர்கள் கடவுளின் பாதுகாப்பில் நலம்பெறுவார்கள், கோதுமை போல் தழைத்தோங்குவார்கள, திராட்சைக் கொடிபோல் செழிப்படைவார்கள் என்ற வாக்குறுதியும் அளிக்கிறார்
இயேசு தன் தந்தையிடம் இருந்து எதைக் கற்றுக்கொண்டாரோ அதை தம் சீடர்களுக்குப் பயிற்றுவித்தார். இப்போது அவற்றை உள்ளவாறு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது, சீடர்களின் பணியாக ஒப்படைக்கப்படுகிறது.
ஒவ்வொரு குருவுக்கும் சீடர்கள் இருப்பது இயல்பு. அவ்வாறே, தம்மிடம் இருந்து கற்றுக்கொண்டு, தமக்குப் பின் அதே பணிகளைத் தொடர இயேசு தம் சீடர்களைத் தேர்வுச் செய்கிறார்.
ஓசேயா தன் மனைவியை நல்வழிப்படுத்த முயன்றும் தோல்வி கண்டார். அவருடன் அவள் ஒத்துழைக்கவில்லை. பழைய வாழ்வை விட்டொழிக்க அவளால் முடியவில்லை. மனமாறியிருந்தாள் அவளுக்கு புதுவாழ்வு கிடைத்திருக்கும்.
பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி. இயேசுவின் ஆடையைத் தொட்டாலே குணமடைவேன் என்று அவரது ஆடையைத்தொட்டவுடன் அவளும் குணமடைந்தாள். பன்னிரண்டு ஆண்டுகளாக நீடித்தத் தீட்டினால் அவள் சமூகத்தில் விலக்கப்பட்டவள் (லேவி 15: 25) விடுதலைப் பெற்றாள்.