ஆண்டவரின் ‘அஞ்சாதீர்' எனும் கூக்குரல் நமது செவிகளில் ஒலித்துக்கொண்டிருக்க வேண்டும். இல்லையேல் கிறிஸ்தவம் இவ்வுலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் இருக்க முடியாது.
‘ஏட்டுக் கணக்கை மாத்தி மாத்தி எழுதி வச்சாரு – ஈசன் போட்ட கணக்கு மாறவில்லை போய் விழுந்தாரு’ என்ற ஒரு சினிமா பாடலின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. நம் விருப்பப்படி எதையும் சாதிக்கலாம் என்று எண்ணி செயல்பட்டால் தோல்விதான் மிஞ்சும்.
நம்மில் உயிரோட்டமான வாழ்வை அளித்திருப்பவர் தூய ஆவியார். அவர் நம்மில் இருந்துகொண்டு செயலாற்றும்போது, நாம் மாறுபட்ட வாழ்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் என்பதை ஆய்ந்துணர வேண்டும். நாம் உலகம் சார்ந்த வாழ்க்கைக்கான கோழைகள் அல்ல.
கிறிஸ்தவ வாழ்வில் நாம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இருளுக்கும் ஒளிக்கும் பணிவிடை செய்ய இயலாது. கடவுளுடனான நமது உறவை தைரியமாக அறிவிக்கவும் சாட்சியம் பகரவும் துணிவு தேவை. இந்த வரத்திற்காக தூய ஆவியாரிடம் மன்றாடுவோம்.
இன்றைய நாளில் அன்னை மரியைவைப போற்றி மாட்சிபடுத்தும் அதே வேளையில், கடவுள் நம்மீது தயவு கொண்டு, தம் ஒரே மகனுடனான மீட்பின் கருவிகளாகப் பங்குபெற அழைத்துள்ளார் என்பதை முதலில் நம்புவோம்.
இயேசு உயிர்த்தெழுந்தார் என்று கூறும்போது, அவர் இன்றும் என்றும் நம்மோடு வாழ்கிறார் என்பதுதான் பொருள். எனவேதான் இயேசு உயிர்த்தெழுந்தார் எனும் உண்மையைத் திரும்பத் திரும்பக் கூறுவதன் மூலம் அவர் உண்மையில் நம்மோடு வாழ்கிறார் என்பதை நற்செய்தியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.
நாம் அனைவரும் உலக மீட்புக்கான பணியாளர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இயேசுவாலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை என்பதை உலகிற்குச் சொல்லாலும் செயலாலும் எடுத்துரைப்போம்.