தொலைத் தொடர்பில் தொலைந்துபோன தொடர்புகள்.. | VeritasTamil

நீங்கள் 'ஆர்த்தடாக்ஸ்' குடும்பத்தை உயர்வாக கருதியது போல்... நாங்கள் ஆன்ராய்ட் குடும்பத்தை உயர்வாக கருதுகிறோம். நாங்கள் அறைக்குள்ளே முடங்கிக்கிடந்து அலசுகிறோம் உலகத்தை இனி கதை சொல்ல பாட்டி வேண்டாம்! கூகுள் போதும்...! கடைசி வரை உறவு வேண்டாம் கணிணி போதும்...! இனி குடும்பம் என்று மட்டும் பொதுவாகச் சொல்லாதீர்கள். நீங்கள் ஃபேஸ்புக் குடும்பமா... வாட்ஸ் குடும்பமா... என்று விளக்கிச் சொல்லுங்கள்...! இனி வாழும் நாட்களில் தொலைத் தொடர்புகளில் உறவுகளைத் தொலைந்து விடாமல்... சொந்த பந்தங்களை இழந்து விடாமல்... விழிப்பாய் இருப்போம் தொலை தொடர்புகளில் விழாமல் நடப்போம்!

- திருமதி. லில்லி 

குரல்: ஜூடிட் லூக்காஸ்

 

(இந்தப்பதிவு 'குவனெல்லிய சபை' நடத்தும் 'அன்பின் சுவடுகள்' என்ற மாத இதழிலிருந்து எடுக்கப்பட்டது.)