உள்ளத் தூய்மையின் மேன்மையை எடுத்துரைத்த ஆண்டவரே, உலகம் சாராத உம் சீடராக வாழ, தூய எண்ணத்தால் எனது சொல், செயல் அனைத்தும் நீர் தந்த ஞானத்தின் வெளிப்பாடாக இருக்க தூய ஆவியார் எனக்குத் துணைபுரிவீராக. ஆமென்.
எருசலேம் ஆலயத்தை தமது உறைவிடமாகக் கொண்ட ஆண்டவரே நமது இல்லத்தின் தலைவராக இருந்திட வேண்டும். ‘ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும்’ (திபா 127:1) என்பதை நாம் உணர வேண்டும்.
இன்றைய நற்செய்தியில் இயேசுவை தேடி ஓடி வந்த கூட்டம் பல நன்மைகளைப் பெற்றது. அவ்வாறே, இயேசுவை மையமாகக் கொண்ட அன்பியத்தை நாடிச் செல்வோருக்கும் பல நன்மைகள் கிட்டும் என்பதில் ஐயமில்லை.
நல்ல பெற்றோராக இருந்து, தன்னுடைய குழந்தைக்கு செய்ய வேண்டிய மறை கூறித்த காரியங்களை மரியாளும், வளனாரும் செய்து கொடுத்தது போல, இன்றைய காலச் சூழலில் பெற்றவர்கள் செய்து கொடுத்து வருகின்றோமா? என்கின்ற வினாவோடும் பங்கேற்பது சிறப்பானது.
‘கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம்" எதற்கு? என்பதற்கொப்ப பிள்ளகைள் வழிதடுமாறி, அதர்ம வழியிலே சென்று, அனைத்தையும் இழந்து துன்புறும் காலத்தில் கண்கலங்காது, சிறுவயது முதல் நற்பண்புக்கும் இறைநம்பிக்கைக்கும் உரியவர்களாகப் பயிற்றுவித்து வளர்த்து ஆளாக்குவதே நம் கடமை என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
நாமும் பல சமயங்களில் மற்றவர்கள் நம்மைக் கண்டித்துத் திருத்த முற்படும் போது அவர்களை ஏற்றுக்கொள்ளாமல்,அவர்களுடைய பிண்ணணி என்னவென்பதை ஆராயத் தொடங்குகிறோம். இப்படிப்பட்ட மனநிலையை அகற்ற இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.
மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? (மத் 16:26) எனும் இயேசுவின் கேள்வியை மனதில் நிறுத்தி, நற்கருணையின் மக்களாக வாழ்வோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு விதைப்பவர் உவமையையும் அதற்கான மிகத் தெளிவான விளக்த்தையும் நமக்குக் கூறுவதை நாம் வாசிக்கிறோம். விதை கடவுளின் வார்த்தை என்பதும், அவ்வார்த்தைகளைக் கேட்கின்றவர்களின் வேறுபட்ட மனநிலைகளும் மிக அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
நாம் இறை திருவுளத்தை நிறைவேற்றும் பொழுது தூய ஆவியார் நம்மிடம் குடி கொள்வார். அப்பொழுது அவர் கொடுக்கும் மகிழ்ச்சியும் நிறைவும் ஆற்றலும் நமக்கு முழுமையாக கிடைக்கும். அத்தகு ஆற்றலை நாமும் பிறரும் பெற்றுக்கொள்ள இறை திருவுளத்தை அறிந்து செயல்படும் ஞானத்தையும் அருளையும் வேண்டுவோம்.
கடவுளின் ஆசீரையும் அருளையும் பெறுவதற்கு பொறாமை என்ற நச்சுக்கிருமித் தடையாக இருக்கிறது. அவற்றைக் களைந்து மனிதநேயத்திலும் மனித மாண்பிலும் சிறந்து விளங்குவோம். அதற்குத் தேவையான அருளை வேண்டுவோம்.
சமத்துவமும் சமூக நீதியும் வெளிப்பட நாம் போராட வேண்டும். இதைச் செய்திடவே நம் ஆண்டவர் இயேசு நமக்கெல்லாம் அழைப்பு விடுக்கிறார். சட்டத்தை வைத்து பிறர் நல வாழ்வு பெற நாம் உழைக்கத் தயாரா?