பிளவுபட்ட கிறிஸ்தவம்! | Martin Luther King

எந்த ஒரு கருத்துக்கும் ஒரு மறுப்பு உண்டு. காலத்தின் மாறுதலாய் அது ஏற்படுவதுண்டு. இந்து மதத்தில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கு தீர்வாக புத்தமும் சமணமும் தோன்றியது. அதே புத்தமதம் பிறகு மகாயானம் -ஹீனயானம் எனப் பிரிந்தது. புதிய மதத்தினைத் தோற்றுவித்த இயேசுவின் கொள்கையில் மாற்றம் இல்லை என்றாலும், கிறிஸ்துவ சமயத்திலும் கத்தோலிக்கர் - பிராட்டஸ்ட்டெண்டுகள் என்ற பிளவும், பிரிவும் எழுந்தது. ஆனால், இதனை நாம் ஓர் மத சீர்திருத்த இயக்கம் (Counter reformation) என்றே அறிகிறோம்.

இதற்கு முக்கிய காரணம் மார்ட்டின் லூதர். இவரது காலம் 1483 - 1546. இவரது தாயகம் கிழக்கு ஜெர்மனி. தத்துவம் மற்றும் இலக்கியம் படித்தவர். இவர் கற்றது எபர்ட் (Efurt) பல்கலைக்கழகத்தில். முதலில் மத குருமாராக சேர்ந்தார். விட்டன்பார்க்கில் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

இக்காலத்தில் ரோமன் சர்ச்சில் அரசியல் கலந்தது. அதோடு ஊழல் மலிந்தது. லஞ்சம் பெருகியது. பல முறைகேடுகள் நடந்தன.

நேர்மை, ஒழுக்கம், துணிவு எனப் பல உயர் குணங்களையும், மதப்பற்றும், இறைப்பற்றும் மிக்க மார்ட்டின் லூதருக்கு இது பிடிக்கவில்லை. மனக்கஷ்டம் அடைந்தார். இவரைப் போன்று வேறு சில நேர்மையாளர்களுக்கும் இக்குறை வருத்தம் தந்தது. ஜான்விக்னிப் (1320-1384) இங்கிலாந்து, ஜான்ஹஸ், ப்ராக் போன்ற வர்கள் இதுகுறித்து - நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து பேசிட ஆரம்பித்தார்கள்.

அக்டோபர் 31, 1517இல் மார்ட்டின் லூதர், விட்டன் பர்க் சர்ச்சில் ஓர் அறிக்கையை ஒட்டினார். அது ஒரு கடிதம் போல அமைந்தது. அக்கடிதம் சர்ச்சின் பலவித குறைபாடுகளைக் கடுமையாக நேரிடையாகச் சுட்டிக் காட்டியது. (This letter entitled the 95 theases against the indugences, accused Arch bishop) லூதரின் கருத்துக்கு எதிர்ப்பு இருந்தபோதிலும், நிறைய ஆதரவும் கிடைத்தது. பேராயர்ப் பற்றிய குற்றச்சாட்டு, ஆயருக்கு  கோபம் அளித்தது.

இதனால் போக் (1475 -1521) லூதர் கூறியதை திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார்.

ஆனால், ஆயரின் கோரிக்கையை மார்ட்டின் லூதர் ஏற்க மறுத்தார். அதனால் லூதர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆலய உறுப்பினரில் இருந்து லூதர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதுவே கிறிஸ்துவ அமைப்பில் ஏற்பட்ட சீர்திருத்த இயக்கம். இவர்கள் பிராட்டஸ்ட்டெண்ட் எனப்பட்டனர்.

லூதர் கிறிஸ்துவம் தழுவிய ஓர் மதக்கோட்பாட்டை அறிவித்தார். கத்தோலிக்க திருச்சபை தொடர்பை விட்டார்.

ஸ்லபென் நகரில் (Eisleben) எஞ்சிய காலத்தைக் கழித்தார்.

விவிலியத்தை, இவர் ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்தார். இவரின் ஆதரவாளர்கள் லூதரன்ஸ் (Lutherens) என அழைக்கப்பட்டனர். லூதரினசம் இன்றும் ஸ்காண்டிநேவியா, ஜெர்மனி, தென்னாப் பிரிக்கா நாடுகளில் உள்ளது.

இதனால் ரோம் -போப் அரசியல் தலையீடு, லஞ்சம், ஊழல் போன்ற குறைபாடுகள் முற்றிலும் நீங்க வில்லை என்ற போதும், ஓரளவு குறைந்தது. சரி செய்யப்பட்டது. அதற்கு உதவியவர் லூதர் எனலாம்.

இயேசுவால் ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்துவ மதம் பல மாற்றங்கள் இல்லாது பல நூற்றாண்டு பரவியது.  கத்தோலிக்க சபையே இதன் தலைமையிடமாக மாற்றமில்லாது நீண்ட நாள் இருந்தது. அதனை உடைத்து, கிறிஸ்துவ சமயம் கத்தோலிக்கர் - பிராட்டஸ்ட்டெண்ட் என்ற மாபெரும் பிரிவாக காரணமானார் இவர். அதனால் வரலாற்றை மாற்றி எழுதிய பெருமைக்குக் காரணமாகிறார்.