இரக்கம் காட்டி

படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது.

திருப்பாடல்கள் 84-3.

ஆண்டவருடைய ஆலயத்தில் பிரவேசித்த தாவீது சுற்றும் முற்றும் பார்க்கிறார். அங்கே அடைக்கலான் குருவி கூடு கட்டியிருந்தது. சிட்டு குருவித் தன் குஞ்சுகளை பாதுகாப்பாக வைத்திருந்தது.

அடைக்கலான் குருவிக்கே இரக்கம் காட்டி தன் பீடங்களண்டையில் இடம் கொடுத்து பாதுகாக்கும் கடவுள் நம்மை கை விடுவாரோ.   

நம்மை நடத்துவார். தங்குவதற்கு ஒரு இடம் இல்லையே. சொந்தமாக வீடு இல்லையே என நாம் தவிக்கிறோம் . இந்த உலகில் உள்ள வீடு எல்லாம் குருவி கூடு போன்றவையே. கூட்டை எளிதில் கலைத்து விடலாம். நம் வீடு இங்கு இல்லை. நிலையான விண்ணகத்தில் உள்ளது. 

 கூடு நிலையானதல்ல; ஆனால் வீடு நிலையானது. பறவைகள் கூட்டைவிட்டு பறந்து போய்விடுகின்றன. நாமும் இம்மைக்குரிய வாழ்க்கையை கூட்டிலே வாழுகிறோம். . நாமும் இந்த வாழ்வை விட்டு பறந்து போய் விடுவோம். 
 
தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ‘உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்’ என்று சொல்லியிருப்பேனா? என்று இயேசு சொல்கிறார் . நாம் நம் நிலையான வீட்டை தேடி ஆண்டவருடைய வார்த்தையின் படி நடப்போம். அவர் மண்ணக வாழ்வுக்கான கூட்டையும் விண்ணக வாழ்வுக்கான வீட்டையும் நமக்கு தந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

 

ஆண்டவரே எங்கள் தந்தையே, உம்மை போற்றுகிறோம். விண்ணகத்தில் உறைவிடங்களை உருவாக்கும் நீர் எங்கள் உலக வாழ்வின் தேவைகளையும் சந்திப்பீர் என்று நம்புகிறோம். நீர் எனக்காக எல்லாம் செய்து முடிப்பீர். உம் பாதுகாப்பில் அமைதியாக வாழும் எங்களை காத்தருளும் ஆமென்.