திட்டமிட்டு ஆண்டவரே

கடவுள் அவரை நோக்கி, “நானே எல்லாம் வல்ல இறைவன். நீ பலுகிப் பெருகக்கடவாய். ஓரினமும் மக்களினங்களின் கூட்டமும் உன்னிடமிருந்து தோன்றும். அரசர்களும் உன் வழிமரபில் உதிப்பார்கள்.

தொடக்க நூல்  35-11.

ஆண்டவர் நம் வழித்தோன்றல்கள் எப்படி இருப்பார்கள் என்பதை கூட திட்டமிட்டு நடத்துகின்ற கடவுள்.

யாக்கோபு மூலமாக வரும் சந்ததி பலுகிபெருகும் .  ஓர் பெரிய இனம் தோன்றும். அவர் சந்த்ததியில் அரசர்கள் தோன்றுவார்கள் என்று பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆண்டவர் அறிவிக்கிறார்.  அவர் நம்மை மட்டும் அல்ல நம் வழித்தோன்றல்களையும். அசீர்வதிக்கும் கடவுள்.  

உன் பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பாய் என்றும், உன் பிள்ளைகள் உம் பந்தியை சுற்றிலும்  ஒலிவமர கன்று போல செழித்து வளர்வார்கள், உன் பிள்ளைகளின் மகிழ்ச்சி பெரியதாக என்று , நம் சந்ததியை அசீர்வதிக்கும் கடவுள் நம் கடவுள். 

 

ஆண்டவரே உமக்கு நன்றி. ஆண்டவரே எங்கள் பிள்ளைகளையும், எங்கள் வழித்தோன்றல்களையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறோம். எங்கள் பங்கிலுள்ள எல்லா இளையோரையும் ஆசீர்வதியும். அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கவும், உலக பாவங்களில் விழாது  உமக்கு ஏற்ற வாழ்வு வாழவும் துணை செய்யும். அனைத்து சிறு பிள்ளைகளும் அறிவு ஞானம், உடல் சுகத்தோடு வளரவும் அருள் புரியும். ஆமென்.

 

Add new comment

1 + 0 =