என் நம்பிக்கையே

காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்: சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி விதித்துள்ளது.
எசாயா  9:1

இறைவார்த்தை நம் உள்ளத்திற்கு ஒவ்வொரு நொடிப்பொழுதும் புதிய நம்பிக்கையை விதைத்துக் கொண்டே இருக்கின்றது. நம் புறக் கண்களால் அகக் கண்களாலும் அதை பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்த இக்கட்டான காலகட்டத்திலே நம் பார்வை சற்று மங்கி இருக்கலாம். இறைவன் தரும் நம்பிக்கையை நம் உள்ளம் உணராது இருந்திருக்கலாம். 

இப்படியே இது இருக்கக் கூடாது என்று உம்முடைய வார்த்தையை இன்று எங்களுக்கு வழங்கி இருக்கின்ற எங்கள் ஆண்டவரே உமக்கு நன்றி. உம்முடைய அருள் எனும் பேரொளி எங்கள் கண்களுக்கு புறப்படுவதாக. வாழ்வு எனும் சுடரொளி எங்கள் மேல் விழுவதாக. 
உம் கருவிகளாக எங்கள் சிந்தனையும் சொல்லும் செயலும் அமைவதாக. 
எம்மோடு இருப்பவர் நீர் ஒரு நாளும் கைவிடாதவர் நீர் என்று எங்கள் உள்ளம் ஆழமாய் நம்புவதாக.

எங்கள் நம்பிக்கையை ஆழப்படுத்தும் ஆமென்.

Add new comment

4 + 4 =