உருவாக்கும் இறைவன்

அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்” என்றார். 

தொடக்க நூல் 15-5.

ஆண்டவர் ஆபிராம் ஒரு குழந்தைக்கான அறிகுறி இல்லாத சமயத்திலேயே விண்மீன்களை போல உன்னை பெருக செய்வேன் என்று முன் அறிவிக்கிறார்.  இல்லாத நிலையிலும் ஒன்றை உருவாக்கும் இறைவன். அவருடைய வம்சா வழிகள் உலகெங்கும் பரவி இருக்கும் அளவுக்கு கடவுள் அவரை பெருக செய்தார். 

அவர் யாரையும் சிறுமை படுத்த மாட்டார். பெருக செய்கிற கடவுள்.  ஆசீர்வதிக்கும் இறைவன். நம்மையும் ஆசீர்வதிப்பார். வளங்களாலும் நலங்களாலும் நிரப்புவார். குழந்தை பேறு இல்லாத பிள்ளைகளுக்கு மகப்பேற்றை கொடுப்பார். கலங்க வேண்டாம்  . கர்ப்பத்தின் கனிகள் ஆசீர்வதிக்க ப்படும். 

 

அன்பு இறைவா, உம்மை துதிக்கிறோம்.  ஆண்டவரே எங்களையும் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களையும் எங்கள் ஆலயத்தில் உள்ளவர்களையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்.  எங்கள் பங்கு மக்கள் அனைவரும் எல்லா வளங்களும் நலங்களும்  நிறைந்தவர்களாக வாழ அருள் புரியும்  ஆமென்.

Add new comment

9 + 0 =