உடனிருப்பு

அவர் இறைப்பற்றுள்ளவர்; தம் வீட்டார் அனைவருடனும் கடவுளுக்கு அஞ்சி நடந்தவர்; மக்களுக்கு இரக்கச் செயல்கள் பல புரிந்தவர்; இடைவிடாது கடவுளிடம் மன்றாடிவந்தவர். திருத்தூதர் பணிகள் 10-2. செசரியா நகரில் கொர்னேலியு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் இத்தாலியா எனப்பட்ட படைப்பிரிவில் நூற்றுவர் தலைவர். அவர் இடைவிடாது ஜெபிப்பவர். அதோடு இரக்க செயல்களும் செய்பவர். நம் வாழ்வில் நாம் வேண்டலோடு நல்ல செயல்களும் செய்ய வேண்டும். 

அன்னை மரியாள் இறை வேண்டலில் இருந்தார்கள். எலிசபெத் அம்மா கருவுற்றிருக்கும் செய்தியை அறிந்ததும் அன்னை மரியாள் அங்கு சென்று அவர்களை சந்தித்து வாழ்த்தியது மட்டும் அல்ல அங்கு ஏறக்குறைய மூன்று மாதங்கள் தங்கி இருந்து அவர்களுக்கு உதவி செய்தார்கள். 

நாம் விவிலியத்தில் பார்க்கும் மார்த்தா மரியா சகோதரிகளை கவனித்தால், மரியா உரையாடல் வழியாக உன்னதரின் மாண்பையும் உடன் இருப்பையும் உணர்ந்து இறை தேடலை அடைந்திருந்தார்.  மார்த்தாவிடம் செயல் வாழ்வு இருந்தது. ஆனால் இறை வேண்டல் இல்லை.

நம் வாழ்வில் இறை வேண்டல் இல்லா செயலும், செயல்பாடு இல்லாத இறை வேண்டலும் பயனற்றது.

ஜெபம்: ஆண்டவரே,  நாங்கள் ஒவ்வொரு நாளும் உம் பாதம் அமர்ந்து உம் வார்த்தைகளை கேட்டு உம் உடனிருப்பை உணர அருள் தாரும். எங்கள் வாழ்வில் உம் வார்த்தைகளை செயல்படுத்தி வாழ துணை செய்யும். எங்கள் வாழ்வு இறைவேண்டல் இரக்க செயலும் நிறைந்ததாக இருக்க உதவி புரியும். ஆமென்.

Add new comment

5 + 0 =