ஆண்டவரே பேசும்

அவர் தாம் கண்ட வேறொரு கனவையும் தம் சகோதரர்களுக்கு விவரித்தார். “நான் மீண்டும் ஒரு கனவு கண்டேன்; அதில் கதிரவனும் நிலவும் பதினொரு விண்மீன்களும் என்னை வணங்கக் கண்டேன்” என்றார்.

தொடக்க நூல் 37-9.

ஆண்டவர் , யோசேப்புடன் கனவில் பேசுகிறார். பின் நடப்பதை முன் அறிவிக்கிறார். அதன் படியே பின்னாளில் , .  யோசேப்பு தம் தந்தை, தம் சகோதரர், தம் தந்தையின் குடும்பத்தார் அனைவருக்கும் அவரவர் பிள்ளைகளின் எண்ணிக்கைக்கேற்ப உணவளித்து அவர்களைப் பேணிக் காத்துவந்தார். அவர்களை காப்பாற்றுகிறார்

அவர்கள் அனைவரும் எகிப்தில் அவரது அதிகாரத்துக்கு கீழ் வருகிறார்கள்.

 ஆண்டவர் நமக்கு முன் அறிவிக்கிறார்.  புனித சூசையப்பர் கனவில் , குழந்தை இயேசுவையும் மாதவையும் கூட்டி கொண்டு  எகிப்து நாட்டுக்கு தப்பி ஓட சொல்லி எச்சரிக்கபடுறார். இப்படி விவிலியத்தில் அநேக இடங்களில் ஆண்டவர்  கனவில் பேசி இருக்கிறார். ஆண்டவரோடு நாம் இருந்தால் , சில  நேரங்களில் ஆண்டவர் நமக்கு , பின்  நடப்பவற்றை கனவுமூலம்  வெளிப்படுத்துவார். நாமும் அதற்காக ஜெபித்தால் அந்த நிகழ்வு நம் வாழ்வில் நடப்பதை நாம் காண்போம்.

 

ஆண்டவரே எங்களுக்கு செய்து வரும் எல்லா நன்மைகளும் உமக்கு நன்றி. எங்களோடு  பேசும் ஆண்டவரே. நாங்கள்  நடக்கவேண்டிய வழியை எங்களுக்கு தெரியப்படுத்தும். பாதைகாட்டும். உம் ஒளியில் நடக்க வரம் தாரும். ஆமென்.

 

Add new comment

6 + 3 =