1944-ஆம் ஆண்டு நாசிசத்தின் கீழ் மறைச்சாட்சியான இரண்டு இத்தாலிய அருள்பணியாளர்களுக்குப் புனிதர் பட்டம் | Veritas Tamil
1944-ஆம் ஆண்டு நாசிசத்தின் கீழ் மறைச்சாட்சியான இரண்டு இத்தாலிய அருள்பணியாளர்களுக்குப் புனிதர் பட்டம்
வத்திக்கான், நவ. 24: 1944-ஆம் ஆண்டு இத்தாலியின் எமிலியா ரோமக்னாவில் நாஜி ஆக்கிரமிப்பின் போது, அவர்களால் கொல்லப்பட்ட இத்தாலிய அருள்பணியாளர்கள் இருவருக்குப் புனிதர் பட்டம் வழங்குவதற்கான அங்கீகாரம் திருத்தந்தையால் வெளியிடப்பட்டுள்ளதாக ஆணையத்தின் தலைவரான கர்தினால் மார்செல்லோ செமராரோ தெரிவித்துள்ளார். சான் மார்டினோ டி கப்ராரா ஆலயத்தில் பணியாற்றிய 26 வயதான அருள்பணியாளர் உபால்டோ மார்ச்சியோனி மற்றும் சான்மிக்கேல் டி சால்வாரோவில் உள்ள டெகோனிய துறவறசபையின் 32 வயதான அருள்பணியாளர் மார்டினோ
கபெல்லி ஆகியோரின் மறைச்சாட்சியம் தொடர்பான ஆணைகளைத் திருத்தந்தை லியோ வெளியிட்டுள்ளார்.
புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ள உபால்டோ மார்ச்சியோனி, 1918-ஆம் ஆண்டு பிறந்தவர்; தனது 24 வயதில் போலோக்னா கதீட்ரலில் அருள்பணியாளராக நியமிக்கப்பட்ட இவர், 1944-ஆம் ஆண்டு சான் மார்டினோ டி கப்ராரா என்ற ஆலயத்தில் ஆன்மிக ஆலோசகராக நியமிக்கப்பட்டார். நாஜிக்களால் அங்கு ஆலயத்திற்குள் பலிபீடத்தின் முன் தலையில் சுடப்பட்டு மறைச்சாட்சியானார்.
அருள்பணியாளர் மார்டினோ கபெல்லி 1912-ஆம் ஆண்டு இத்தாலியின் பெர்கமோ மாகாணத்தில் உள்ள நெம்ப்ரோவில் பிறந்தவர். 17 வயதில் இயேசுவின் புனித இருதய அருள்பணியாளர்களின் சபையில் சேர்ந்தார். செப்டம்பர் 29, 1944 அன்று, கிரெடாவில் நாஜிக்கள் செய்த படுகொலைக்குப் பிறகு, 770 - க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்படவிருந்த மார்சபோட்டோ மற்றும் மான்டே சோல் பகுதிகளை நாஜி இராணுவம் ஆக்கிரமித்தபோது, இறந்து கொண்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்க மார்டினோ விரைந்தார். அங்கு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 1 அக்டோபர் 1944 அன்று மாலை, பியோப்பே டி சால்வாரோவில் ஒரு குழுவுடன் அவர் தூக்கிலிடப்பட்டார்