முன்மதி என்பது விழிப்புணர்வு, அறிவாற்றல், ஞானம், எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை, திட்டமிடுதல் போன்றவற்றின் கலவை எனப்படுகிறது. முன்மதி எனபது எப்போதும் தயாராக இருக்கும் நேர்த்தி. இந்த உவமையில் இயேசு ''விளக்கு'' எனும் ஒரு பொருளைப் பயன்படுத்துகிறார்.
திருமுழுக்கு யோவான், வெளிப்படையாக ஏரோதிடம், “உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல'' என அறிவுறுத்தினார். இதன் வழியாக புனித பவுல், ஏரோதுவை கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழ அழைக்கிறார். இதற்காகவே, தன் உயிரையும் தந்தார்.
திருத்தூதர்களின் அயரா உழைப்பில் நம்மை வந்தடைந்தத் திருஅவையில் இணைத்துள்ளோம். ஆகவே, அவர்களின் பணியைத் தொடரவும், அவர்களை அவ்வப்போது நினைவுகூர்ந்து திடம்பெறவும் பணிக்கப்படுகிறோம். இதையே இன்று திருத்தூதரான புனித பர்த்தலமேயு நினைவூட்டுகிறார்.
“சிறைச்சாலைகள் மனித தன்மையின் இருப்பிடங்கள். ஏனெனில் அங்கு மனிதம் சோதிக்கப்படுகின்றது, அங்கு குற்ற உணர்வு உண்டு, துன்பம் உண்டு, தவறான புரிதல்கள் உண்டு”
“அன்பில்லாதவர் கடவுளை அறிந்துகொள்ளவில்லை. ஏனெனில் கடவுள் அன்பாய் இருக்கிறார்” என்கிறார் புனித (1 யோவான் 4:8) ஆம், அன்பை அன்பு கொண்டுதான் அறிய முடியும். ஆகவே இறைவன்மீது நமக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்த நாம் அன்புமயமானவர்களாக மாறுவோம்.
கடவுள் அவர்களில் புதிய ஆவியைப் பொழிவார் என்பது, கடவுளின் சட்டங்களைப் பின்பற்றுவதற்கான புதிய மனநிலை அல்லது அணுகுமுறையை அருளவுள்ளார் என்று பொருள்கொள்ளலாம்.