கொச்சி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை ஆண்டனி கட்டிப்பரம்பில் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் | Veritas Tamil
கொச்சின் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் - திருத்தந்தை லியோ அறிவிப்பு!
திருத்தந்தை லியோ XVI அவர்கள் கொச்சின் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருள்தந்தை ஆண்டனி கட்டிப்பரம்பில் அவர்களை நியமித்து,அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இந்த அறிவிப்பு வெளியானது. அம்மறைமாவட்டத்தின் ஆயராக, மேதகு ஜோசப் கரியில் பணியாற்றி வந்த நிலையில், அவரது பதவி விலகலைத் தொடர்ந்து, ஓராண்டிற்குப் பிறகு, அருள்தந்தை ஆண்டனி கட்டிப்பரம்பில் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொச்சின் மறைமாவட்டத்தில் 78 பங்குகளை உள்ளடக்கிய 1,82,324 கத்தோலிக்கர்கள், 134 மறைமாவட்டக் குருக்கள், 116 துறவற குருக்கள் மற்றும் 545 துறவற சகோதரிகள் உள்ளனர்.
தற்போது,
அம்மறைமாவட்டத்தின் நீதித்துறை ஆயர் பதில் குருவாகப் பணியாற்றி வரும் இவர், தத்துவம் மற்றும் இறையியலில் உயர்கல்வி பெற்றுள்ளார்.
மேலும், உள்ள உரோமில் உர்பானியானா பல்கலைக்கழகத்தில் விவிலிய இறையியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். கும்பளம் புனித ஜோசப் ஆலயத்தின் பங்குத் தந்தையாகப் பணியாற்றிய இவர், ஆயராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், பலரும் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.