தனது இஸ்லாமிய நண்பரின் இறுதி சடங்கில் கலந்துக்கொண்ட கத்தோலிக்க ஆயர் நஸ்ரேன் சூசை. | Veritas Tamil
தனது இஸ்லாமிய நண்பரின் இறுதி சடங்கில் கலந்துக்கொண்ட கத்தோலிக்க ஆயர் நஸ்ரேன் சூசை.
கோட்டாறு மறைமாவட்ட மேதகு ஆயர் நஸ்ரேன் சூசை அவர்கள் குமரி மாவட்ட கத்தோலிக்க கிறித்தவ சமூகத்தவரின் முதன்மை மதகுரு.
இவர் 26.10.2025, ஞாயிறு இனயம் ஜமாஅத் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.ஹமீது அவர்கள் அதிகாலை மரணம் அடைந்தார். மாலை ஐந்து மணிக்கு ஜனாஸா அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் வேளையில் மரண வீட்டின் முன்புறம் வந்து நின்ற வாகனத்தில் இருந்து கோட்டாறு ஆயர் தனது உதவியாளர்களுடன் இறங்கி வீட்டுக்குள் வந்தார். ஜனாஸா குளிப்பாட்டி கொண்டு வந்து உடல்மரணமடைந்த ஒருவரின் உடலை மதிப்பும் மரியாதையும் காட்டி, வெள்ளைச் சுத்தமான துணியால் மூடும் வரை அருகில் நின்று பார்த்த மேதகு ஆயர் அவர்கள் ஜனாஸாவைப் பின்தொடர்ந்தது சுமார் அரை கி.மீ தூரம் பள்ளிவாசல் வரை நடந்து வந்தவர், இறுதிச்சடங்கு நடந்து முடிவது வரை ஓரமாக நின்றதுடன், இறுதிச்சடங்கு அடக்கம் செய்யும் இடம் வரை வந்து, ஒருபிடி மண் தனது கையால் எடுத்து கொடுத்து அடக்கம் முடிவது வரை அங்கிருந்து விட்டு திரும்பி சென்றது நெகிழ்வான காட்சிகள்.
நடந்து செல்லும் வழியில் மேதகு ஆயர் அவர்களிடம் கேட்டபோது, இருவருக்குமான நட்பு முப்பது ஆண்டுகளுக்கு மேலானது என்று கூறிய ஆயர், ஏ.எஸ்.ஹமீது அவர்கள் இனயம் ஜமாஅத் தலைவராக இருந்த நேரத்தில் இனயம் பங்குதந்தையாக பொறுப்பு வகித்த போது துவங்கிய நட்பு தற்போது வரை தொடர்வதாகவும், ஏ.எஸ்.ஹமீது அவர்கள் தனது பிள்ளைகள் திருமணங்களின் போது தேடி வந்து அழைப்பதும், பண்டிகை நாட்களில் விருந்து பரிமாறுவது உட்பட நெருக்கமான நட்பை பேணியவர் என்றும் தெரிவித்தார்..
ஞாயிற்றுக்கிழமை தனது தனது நிகழ்ச்சிகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு இஸ்லாமிய நண்பர் நல்லடக்கம் நிகழ்ச்சியில் கலந்து சிலமணி நேரம் செலவழித்த மேதகு ஆயர் அவர்களின் செயல் போற்றுதலுக்குரியது.