பிச்சைக்காரர்களைத் திருத்துவதும் சேவைதான்| அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

தூய்மையான செயல்களும் சிந்தனைகளும் நிழலைப்போல எப்போதும் ஒருவனைப் பின்தொடர்ந்து வரும்.

சிலர் வயிற்றுப்பிழைப்புக்காகப் பிச்சை எடுப்பார்கள். வேறுசிலர் உழைக்க மனமில்லாமல் பிச்சை எடுப்பார்கள். கை கால்கள் நன்றாக இருந்தும் இது ஊனம் என்று சொல்லிப் பிச்சை எடுப்பவர்களையும் நாம் பார்க்கிறோம். யாருமே பிச்சை எடுப்பதை அவமானமாகக் கருதுவதில்லை. பிச்சை எடுப்பது அவமானம் என்று கருதியிருந்தால் நிச்சயம் இவர்கள் பிச்சை எடுக்க வரமாட்டார்கள். ஆனாலும் “பிச்சை எடுப்பது அவமானம்" என்பதை இவர்களுக்கு உணர்த்தி இவர்கள் மனதை மாற்றுகிறார் கங்காதரன். இவர்கள் யாரு 37ஆண்டுகள் கோவை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் ஏன் பிச்சைக்காரர்களைத் திருத்தப் போனார்?"

2009ஆம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாடு நடந்தது. அப்போது கோவையில் பிச்சைக்காரர்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. எனவே இதைக் கட்டுப்படுத்துவதற்காக அப்போதைய மநகராட்சி ஆணையராக இருந்த அன்சுல் மிஸ்ரா பிச்சைக்காரர்களை இரவில் தங்க வைப்பதற்காக ஓர் இடத்தைத் தேர்வு செய்து, அவர்களுக்கு உணவு, உடை கொடுத்து அங்கேயே இரவில் தங்க ஏற்பாடும் செய்தார். இதன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர்தான் கங்காதரன் அவர்கள். தோடக்கக்காலத்தில் வெறும் பத்து பேர்தான் வந்து தங்கினார்கள். 2010ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பொது இடங்களிலோ, சாலைகளிலோ யாரும் தங்கக்கூடாது என்ற சட்டத்தைப் பிறப்பித்தது. இதனால் காவல்துறையினர் கோவையில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்களைப் பிடித்து இரவிலே இங்கு வீட்டுச்சென்றனர். தங்குவோரின் எண்ணிக்கை பத்திலிருந்து நூறாக உயர்ந்தது.

2011ஆம் ஆண்டு கங்காதரன் அவர்கள் ஓய்வு பெற்றார். இந்தப் பணியைக் கவனிக்க யாரும் இல்லாததால் இந்தச் சேவையைச் செய்ய |இன்னும் மூன்று ஆண்டுகளை நீட்டித்தது மாநகராட்சி. ஒரு காலகட்டத்தில் மலரும் விழிகள்' என்ற அமைப்பைத் தொடங்கி இங்கு வருபவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு “இனிப் பிச்சை எடுக்கமாட்டோம்" என உறுதிமொழி எடுக்க வைக்கின்றனர். பிச்சை எடுப்பவர்களை தல்வழிப்படுத்துவதுதான் இவரின் முதன்மையான பணி. இதுவரை 400பேரையாவது இவர் மனம் திருந்த வைத்திருப்பார். தற்போது இவரது மயத்தில் 86பேர் உள்ளனர்.

அயலாரைப் பற்றி நல்லது நினைப்பதைத் தவிர வேறு மகிழ்வு ஏதும் உண்டோ?

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Tamil Survey Popup Image