கல்விக்குக் கரம் கொடுத்த கணேசன் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

பண பணமில்லை என்பதற்காக எவருமே படிப்பைப் பாதியில் நிறுத்த கூடாது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிபவர் கணேசன். தான் படித்த பள்ளிக்கூடத்திலே ஆசிரியராக இருப்பது இவருக்குப் இயல்பாகவே இரக்கக்குணம் கொண்ட இவர் வறுமையால் படிப்பைப் குருப் பெருமை. பாதியில் கைவிடும் பிள்ளைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பசியினால் துன்புறும் ஏழை எளியவர்களுக்கும் உதவி செய்து வருகிறார்.

கடந்த 17 ஆண்டுகளாகப் படிப்பைப் பாதியில் கைவிடுவதாக இருந்த நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்விக்கு இவர் உதவி செய்திருக்கிறார். பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளியில் பாடம் நடத்தியபிறகு, மீதி நேரத்தில் தனிப்பாடங்களைக் கற்றுக்கொடுத்து, ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு தொகையை நிர்ணயம் செய்து, சம்பாதித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்க முடியும். ஆனால், கணேசனோ தமது ஊதியத்தில் ஒரு பகுதியை வறுமையின் விளிம்பில் இருப்பவர்களுக்காகவே செலவழித்து வருகிறார்.

"படிக்கிற காலத்தில் என்னோடு படித்த நண்பர்கள் பலர் வறுமை காரணமாக படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விட்டனர். பாட நூல்கள் வாங்கப் பணம் இல்லாததால் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்கள் உண்டு. குடும்ப வறுமை காரணமாகப் படிப்பை நிறுத்திவிட்டு கூலி வேலைக்குச் சென்ற நண்பர்களும் உண்டு. இப்போது அவர்களெல்லாம் துன்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சின்ன வயசிலே படிக்கக்கூடிய வாய்ப்பு அவர்களுக்குக் கிடைச்சிருந்தா இன்னைக்கு நல்லா இருந்திருப்பாங்க. என் நண்பர்களுக்கு ஏற்பட்ட நிலைமை இனி யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவர்களை இனம் கண்டு அவர்கள் படிக்க உதவி செய்கிறேன்" என்கிறார் கணேசன்.

இத்தோடு கணேசனின் பணி முடியவில்லை. 43 மாற்றுத்திறனாளி பிள்ளைகளைத் தத்தெடுத்து, அவர்களுக்கான கல்வி உதவிகளைச் செய்துவருகிறார். மேலும் திருமண மண்டபங்களில் மீதமாகும் உணவுகளைக் கேட்டுப்பெற்று, பசியால் வாடும் ஏழை குடும்பங்களுக்குக் கொடுத்து உதவுகிறார். ஓய்வு நேரங்களில் வீடுவீடாகச் சென்று பழைய துணிகளை வாங்கி, அதையும் வறியவர்களுக்குக் கொடுத்து உதவுகிறார். இப்படியும் ஓர் அரசுப் பள்ளி ஆசிரியரைப் பார்ப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.

இந்த உலகத்தில் ஏழைக்கு எழுத்தறிவிப்பதைவிட சிறந்த சேவை எதுவும் இருக்க முடியாது.

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Tamil Survey Popup Image