புதையல் | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil
புதையல்
மனிதருக்கு மகிழ்ச்சி தரும் ஒன்று என்றாலும், உண்மையான மகிழ்ச்சியே நீங்கள் தேடிப் பெற வேண்டிய புதையல் என்பதை அறியீரோ?!
பொன்னையும் வெள்ளியையும் வைரத்தையும் வைடூரியத்தையும் நிலத்தையும் பணத்தையுமே புதையலாகப் பார்க்காதீர்கள். உண்மையான புதையல் கண்ணுக்குத் தெரிபவை அல்ல; இதயத்தால் பார்க்கக் கூடியவையே!
கடவுள் கொடுத்த இந்த வாழ்க்கையே சிறந்த புதையல் என்பதை உணராமல், புதையலைத் தேடி வாழ்க்கையைத் தொலைத்து விடாதீர்கள்!
எளிமை, பொறுமை, பரிவு போன்ற நற்பண்புகளே சிறந்த புதையல். அவற்றைப் பெறவே வருந்தி உழையுங்கள்! வளமாய் வாழ்வீர்கள்!
ஒரு நல்ல புத்தகம் உங்கள் எண்ணதுக்கான புதையல்;
உங்கள் உயர்வில் மகிழும் தூய உள்ளம் கொண்டவர்கள் நீங்கள் வாழ்நாள் முழுதும் பாதுகாக்க வேண்டிய புதையல்!
கல்வி ஒரு கண்ணியமான புதையல்;
அது கற்றவரை எந்நாளும் பின்தொடர்ந்து காக்கும்.
தன்னம்பிக்கை ஒரு திண்ணமான
புதையல்;
அது உங்களைத் தளராமல் தரணியெங்கும் தாங்கிச் செல்லும்!
புதையலைத் தேடிப் புவியெங்கும் அலையாதீர்கள்; உங்கள் இதயத்திலும் சிறந்த புதையல் இந்த இகத்தில் இல்லை என உணருங்கள்!
வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🌹🌷🌷💐💐
எழுத்து
அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச.
தூய ஆவியார் ஆலயம், தாகூர் நகர், புதுச்சேரி.