உழைப்பு ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 21.10.2024

உழைப்பு என்றதும் கல் உடைப்பது, உழுவது, கஷ்டப்பட்டு பாரம் சுமப்பது என்று பொருள் கொள்ள வேண்டாம்.

பாடுபடுவது, சிரமங்களை மகிழ்வுடன் ஏற்பது, பல மைல் பயணித்துப் பள்ளிக்கும் கல்லூரிக்கும் போய் வருவது கூட உழைப்புத் தான்.

சோம்பி இராத சுகம் தேடாத எல்லா முயற்சிகளும் உழைப்புத் தான்.

இப்படி உழைத்தவர்கள் தான் உயரமான இடங்களில் பின்னர் உட்கார்ந்தவர்கள்.

கடின உழைப்பு வெற்றியைத் தராவிட்டாலும், வெற்றிக்கான வாய்ப்பை நிச்சயம் அதிகப்படுத்தும்.

மற்றவர்கள் நம்மளப் பத்தி என்ன நினைப்பார்கள் என்று பயந்து வாழ்வதை விட,

அவர்கள் என்ன நினைத்தால் நமக்கென்ன என்று துணிந்து வாழுங்கள்.

பறப்பதற்கு வானம் இருக்கிறது. சிறகுகளுக்கு காத்திருந்து சிறைப்பட்டு இருக்காதே... 
பறக்க முயற்சி செய்.

சிறகுகள் வரும் போது அதையும் பயன்படுத்திக் கொண்டால் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் நன்னெறியும் நற்பண்புகளும் உழைப்பும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் தாய் அருள் நிறைந்த மரியே. 

மரியே வாழ்க


சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி
 

Tamil Survey Popup Image