மனித இயல்பு | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 17.05.2024
மற்றவர்கள் உன்னை உதாசீனப் படுத்தும் போது உனக்கு மன உளைச்சலைத் தரும்.
உயிர் போகும் வலியை உண்டாக்கும் ஆனால் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ஓர் தெளிவைக் கொடுத்து உன்னை அமைதிப் படுத்தும்.
உன் ஆற்றல் வெளிப்படும்.
வலிகள் சில நேரம் புதிய வழிகளை ஏற்படுத்தும்.
அனைத்து தவறுகளையும் செய்து விட்டு எல்லாம் விதி என்று நினைப்பதே மனிதர்களின் இயல்பு.
பிடித்திருந்தால் குறை குறைய தெரியும்
நிறை நிறைய தெரியும்.
பிடிக்கவில்லை என்றால் குறை நிறைய
தெரியும் நிறை குறைய தெரியும்.
இதுவும் மனித இயல்புகளில் ஒன்று தான்.
எப்பொழுதும் உன்னை உன்
கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்.
மற்றவர்கள் உன் எண்ணப்படி நடக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் திறமையும் நம்பிக்கையும் அமைதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறை இயேசுவே.
மரியே வாழ்க
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி
- Reply
Permalink