தாய்லாந்து-கம்போடியா எல்லையில் மோதல்கள் முடிவுக்கு வரவேண்டும் -திருத்தந்தை லியோ வேண்டுகோள்!| Veritas Tamil
கம்போடியா எல்லைகளில் இராணுவத்தினர் இடையே தொடரும் மோதலால் அப்பகுதியில் பெரும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த மோதல் முடிவுக்குவர வேண்டும் எனவும், அப்பகுதியில் அமைதி நிலவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் வேண்டும் எனவும் திருத்தந்தை லியோ கேட்டுக்கொண்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று பிரச்சினை வரும் இதுவரை இராணுவத்தினர் உட்பட பலர் உயிரிழந்துள்ளதாகவும், எல்லைகளில் வரித்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடமைகளை விட்டு வெளியேறி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள திருத்தந்தை அங்குப் பகைமைகளை முடிவுக்குக் கொண்டுயர விடுத்ததுடன் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் தான் செபிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது தப்பாக்கிச் சூடு நிகழ்வதால் உள்ளூர் சமூகங்கள் தொடர்ந்து மோதல்களில் சிக்கிக் கொள்கின்றன. கடந்த கால அரசு முறைப் பேச்சுவார்த்தை முயற்சிகள் எல்லையை நிலைப்படுத்த முயற்சித்தாலும், அது தோல்வியிலேயே முடிந்துள்ளன.
பல ஆண்டுகளாக இங்கு எல்லைப் பிரச்சினை நீடித்த போதிலும் அது அண்மையில் வண்முறையாக வெடித்து மீண்டும் பதட்டங்களை ஏற்படுத்துவது வருத்தம் அளிப்பதாகவும் உடனடியாக துட்டாக்கிச் சூட்டை நிறுத்தி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவேண்டும் என்றும் திருத்தந்தை வியோ இருநாட்டு அரசுகளையும் கேட்டுக்கொண்டுள்ளார்.