"இருளில் கூட, அன்பும் மன்னிப்பும் சாத்தியம்" - திருத்தந்தை லியோ XIV | Veritas Tamil

"இருளில் கூட, அன்பும் மன்னிப்பும் சாத்தியம்" - திருத்தந்தை லியோ XIV
காஸ்டல் காண்டால்போவிலிருந்து திரும்பிய பிறகு வத்திக்கானில் முதன்முதலாக விசுவாசிகளை சந்தித்த திருத்தந்தை லியோ XIV ஆகஸ்ட் 20 புதன்கிழமை தனது வாராந்திர பொதுக் கூட்டத்தில் மன்னிப்பின் உருமாற்ற சக்தி குறித்த நெகிழ்ச்சியான செய்தியை வழங்கினார்.
கடுமையான உரோமானிய கோடை வெப்பம் காரணமாக பால் VI மண்டபத்திற்குள் நடைபெற்ற இந்த நிகழ்வில், உலகம் முழுவதிலுமிருந்து விசுவாசிகள் கூடியிருந்தனர். மண்டபத்தில் போதுமான இடம் இல்லாத போதும் வெளிப்புறத்தில் நிழல் பகுதியில் இருந்தவர்களையும் திருத்தந்தை வரவேற்க நேரம் ஒதுக்கினார்.
"நமது நம்பிக்கையான கிறிஸ்து" என்ற யூபிலி கருப்பொருளில் தனது மறையுரையைத் தொடர்ந்த திருத்தந்தை, துரோகத்திற்கு மத்தியிலும், தெய்வீக மன்னிப்பின் கண்ணாடி மூலம் இயேசுவின் பாடு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் குறித்துப் பேசினார். இயேசுவின் இராவுணவின் நற்செய்தி பகுதியை நினைவுப்படுத்தி அனைவரின் கவனத்தை ஈர்த்தார். அதில் இயேசு யூதாஸுக்கு வழங்கிய ஒரு துண்டு ரொட்டியை குறித்தும் தியானிக்கச் செய்தார்.
"இது வெறும் பகிர்வுக்கான செயல் அல்ல", "இது அன்பை விட்டுக்கொடுக்காததற்கான கடைசி முயற்சி." நிராகரிப்பு மற்றும் துரோகத்தை எதிர்கொள்ளும்போது கூட கிறிஸ்துவின் அசைக்க முடியாத அன்பை வெளிப்படுத்தும் ஒரு சாந்தமான ஆனால் சக்திவாய்ந்த காணிக்கையாக இந்த செயலை இயேசுசெய்தார் என திருத்தந்தை விவரித்தார்.
"இயேசு காலத்திற்குக் கீழ்ப்படிந்தவராக மட்டுமல்ல அல்ல மாறாக அன்பின் நிமித்தம் அவரே அதைத் தேர்ந்தெடுக்கிறார்". "அறியாமையில் அல்ல, மாறாக வரவிருக்கும் விஷயங்களைப் பற்றிய முழு விழிப்புணர்வில் தொடர்ந்து அன்பு செலுத்துகிறார். அது ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பே அவர் சுதந்திரமாக மன்னிப்பை வழங்குகிறார்." என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.
வத்திகான் செய்திகளை மேற்கோள் காட்டி, சாத்தான் யூதாஸுக்குள் நுழைந்ததாக நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பு, அந்த செயல் மீட்பின் சக்தியை மறைக்கக்கூடாது என்று திருத்தந்தை விளக்கினார். "நாம் அவரை நிராகரித்தாலும் கூட, நம்மை அடைவதற்காக கடவுள் எல்லாவற்றையும் செய்கிறார் என்று அது நமக்குச் சொல்கிறது."
மன்னிப்பு என்பது மறதி அல்லது தவறுகளை மறுப்பது அல்ல,, மாறாக, தீமை மேலும் ஒரு தீமையை உருவாக்குவதைத் தடுக்கும் சக்தியும், வலியிலும் கூட அன்பில் முன்னேறிச் செல்லும் தைரியமும் ஆகும்.
"ஒவ்வொரு துரோகமும், ஒரு பெரிய அன்பிற்கான இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அது மீட்புக்கான வாய்ப்பாக மாறும்" கூறி தனது செய்தியை நிறைவு செய்தார்.
Daily Program
