திருத்தந்தை பிரான்சிஸின் உடல் மேரி மேஜர் பெருங்கோவிலுக்குள் அடக்கம் செய்யப்பட்டது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் அடக்கம் செய்யப்பட விரும்பும் இடமாக தேர்ந்தெடுத்த மேரி மேஜர் பெருங்கோவிலுக்குள் Salus Populi Romani என்ற பெயரில் அன்னை மரியா திரு உருவப்படம் வைக்கப்பட்டிருக்கும் பவுல் சிற்றாலயத்திற்கும் Sforza சிற்றாலயத்திற்கும் இடையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடலானது தரையில் மிக எளிமையாக அடக்கம் செய்யப்பட்டது.
திருத்தந்தை பிரான்சிஸின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக பாஸ்காப்பாடல், நன்றிப்புகழ் மாலை, நாடு கடத்தப்பட்டோர் மன்றாட்டு, பற்றுறுதியும் நம்பிக்கையும் போன்றவற்றை எடுத்துரைக்கும் திருப்பாடல்கள் 114, 118, 42,16 ஆகியவை முன்மொழிகளுடன் இலத்தீன் மொழியில் பாடலாகப் பாடப்பட்டன. கர்தினால் ஃபரெல் அவர்கள் இறுதி செபத்தினை எடுத்துரைத்து, புனித நீர் மற்றும் தூபம் கொண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் இருக்கும் அடக்கப்பெட்டியினை அர்ச்சித்தார். திருத்தந்தையின் அடக்கப்பெட்டி அர்ச்சிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டதும் அன்னை மரியின் பாடல் பாடப்பட்டது.
மேரி மேஜர் பெருங்கோவிலுக்குள் Salus Populi Romani என்ற பெயரில் அன்னை மரியா திரு உருவப்படம் வைக்கப்பட்டிருக்கும் பவுல் சிற்றாலயத்திற்கும் Sforza சிற்றாலயத்திற்கும் இடையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடலானது தரையில் மிக எளிமையாக அடக்கம் செய்யப்பட்டது.
Daily Program
