அருளாளர் அருள்சகோதரி ராணி மரியா திரைப்படம் திரைப்பட தணிக்கை சான்றிதழை பெற்றுள்ளது | வேரித்தாஸ் செய்திகள்

அருளாளர்   அருள்சகோதரி ராணி மரியா வட்டத்தில் அவர்களின் வாழ்க்கை பற்றிய திரைப்படமான "முகமற்றவர்களின் முகமாக ", ஜூலை 12 அன்று மத்திய திரைப்படச் சான்றிதழின் இந்திய வாரியம் (CBFC) அங்கீகரித்துள்ளது.

இறுதியாக இந்த திரைப்படம்  கூடிய விரைவில் இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகும் என படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஷைசன் பி.ஓசெப் RVA செய்தியிடம்  தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது கூடிய விரைவில் திரையரங்குகளில் வெளியிட  திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

பல விமர்சனங்கள், ஆலோசனைகள் மற்றும் தணிக்கைத்துறையின் பல கத்தரிக்கப்பட்ட காட்சிகளுக்கு பிறகு அதாவது அருள்சகோதரி ராணி மரியாவை கத்தியால் குத்துவது போன்ற காட்சிகள் தணிக்கை செய்யப்பட்ட பிறகு முகமற்றவர்களின் முகமான இந்த இந்தி  திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.

தணிக்கைக்குழுவின் சான்றிதழ் பெற கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் வரை எதிர்பார்த்துக்  காத்துக்கொண்டிருந்தேன் என்று இதன் இயக்குனர் தெரிவித்தார்.

இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் திரைப்பட சான்றிதழுக்கான சட்டப்பூர்வ நிறுவனமான  மத்திய திரைப்படச் சான்றிதழின் இந்திய வாரியம் நிறுவப்பட்டுள்ளது. 1952 இன் சினிமாட்டோகிராஃப் சட்டத்தின் விதிமுறைகளுக்கு இணங்க, திரைப்படங்களின் பொது காட்சியைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு இந்த துறையின் வசம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் அருள்சகோதரி ராணி மரியாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு முகமற்றவர்களின் முகம் என்ற தலைப்பில் திரைப்படமாக வெளிவரவுள்ளது.

இவர் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள பழங்குடி இன பெண்களுடன் பல ஆண்டுகள் பணியாற்றி  அந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கும் ,நிலமற்ற ஏழை மக்களுக்காகவும், அடித்தட்டு மக்களின்  அடைப்படை வாழ்வுக்கு அயராது பாடுபட்டார் அதன் காரணமாக அதிகாரம் கொண்ட பல மனிதர்களின் எதிர்ப்புகளை சந்திக்க நேரிட்டது. இதனால் அதிகார வர்க்கத்தின்  கோரப்பிடியில் சிக்கி தனது உயிரை இழந்தார். 

1995  ம் ஆண்டில் மறைபணியில் இறைவனின் பாதையில் துடிப்புடன் பணியாற்றிய அருள்சகோதரி ராணி மரியா கொடூரமாக கொல்லப்பட்டபோது அவருடைய வயது 41 . அதன்பிறகு 2017  ம் ஆண்டு அருளாளர் நிலைக்கு திருஅவையால் உயர்த்தப்பட்டார்.

134 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படம்  ட்விலைட் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது, வின்சி அலோசியஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இளம் ஆவணப்படத் தயாரிப்பாளரான ஒஸ்ப்  2017 இல் இந்த திரைப்படத்தைத் தொடங்கினார். சுமார் 150 திரைப்பட கலைஞர்களுடன்  கிட்டத்தட்ட 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. 17 இந்திய மாநிலங்களில் இருந்து 90க்கும் மேற்பட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் இந்தி, மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, பிரெஞ்ச் மற்றும் ஸ்பானிஷ் என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு  திரையிடப்பட  உள்ளது.

இந்த திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்  ஐக்கிய நாடுகள் சபை, உலக தொழிலாளர் அமைப்பு , அமெரிக்க தூதரகம் மற்றும் சர்வதேச  திரைப்படம் (IIFA) ஆகியவற்றின் விருதுகளை வென்றவர். தற்போது, ​​இவர்  மேற்கு இந்தியாவின் மும்பையில் உள்ள இயேசு சபை குருக்களால் நடத்தப்படும் புனித  சேவியர் கல்லூரியில் சேவியர் இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்யூனிகேஷன்ஸ் (XIC) இணை இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்..

மேலும் இவர்  ட்ரை லைட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் இணை நிறுவனர் மற்றும் தயாரிப்பாளராகவும், மும்பையில் உள்ள புனித  சேவியர் கல்லூரியில் உள்ள XIC இல் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்புக்கான பாடத் தலைவராகவும் உள்ளார்.

காந்தி அமைதி அறக்கட்டளையில் சர்வதேச-ஐரோப்பாவின் காந்தி அமைதி தூதராகவும், அமெரிக்காவின் NGGE இன் இயக்குநர்கள் குழுவிலும் உள்ளார்.

இந்த திரைப்படத்தின் இயக்குனர் கூறும்போது உண்மையின் அடிப்படையில் திரைப்படம் எடுப்பது எளிதானது அல்ல" பல இன்னல்களை கடந்து அதை திரைக்கு கொண்டு வருவது எனபது மிகவும் கடினமான செயல் என்று ஓசெப் கூறினார்.

_அருள்பணி வி.ஜான்சன் SdC

(Source from RVA  English News)