அனைத்துப் புனிதர்களின் விழா | All Saints Day | Mrs. Francis Kutty | Veritas tamil
வானத்தில் விண்மீன்களாய் ஒளிரும் புனிதர்களைப் போல, மண்ணில் வாழும் மனிதர்களின் மனங்களில் அன்பின் ஒளியாய் மிளிர்வோம்! உயர்குடிப் பிறப்பில், செல்வந்தர் நிலையிலும், ஏழ்மை நிலையிலும், உயர் அந்தஸ்தில் என பல நிலைகளில் பிறந்துள்ள பலர் சிறு வயதிலேயே பெற்றோர்களால் பக்தியோடும், இறை நம்பிக்கை உள்ளவர்களாகவும் வளர்க்கப்பட்டு, வளரும் பருவத்திலேயே ஆண்டவரின் அன்புக் கட்டளைகளில், இறைவார்த்தைகளின் ஆழம், உணர்ந்து துறவறத்தில் சேர்ந்து பயின்று இறைப்பணிக்காகவும், இறைவனைப் பின்பற்றவும், அர்ப்பணித்து அனைத்தையும் துறந்து, பலவிதமான நெருக்கடிகளையும், கொடிய துன்பங்களையும் சந்தித்து, உபாதைகள் பல பட்டு சிறிதும் தயங்காமல் கொடுமைகளையும், மனமகிழ்ச்சியுடனும், மிகுந்த தாழ்ச்சியுடனும் ஏற்றுக்கொண்டவர்கள் பல புனிதர்கள்.
காற்று, மழை, வெயில், குளிர், பசி, பனி, தண்ணீ ர் பலவற்றையும், பணியினைச் செய்யும் காலகட்டத்தில் கொடிய நோய்களினால் தாக்கப்பட்டும், சிலருக்கு கடினமான நோய்கள் வந்திருந்தும் கடவுளுக்காக அந்த நோயையும் ஏற்றுக்கொண்டு புன்முறுவலுடன் இறுதி வரை வலிகளைத் தாங்கிக்கொண்டு உயிர் விட்ட புனிதர்களும் உண்டு. விண்ணகப் புனிதர்களைப் போற்றுவதோடு நின்றுவிடாமல், மண்ணகத்தில் புனிதர்களாய் வாழ்ந்து, இறைவனின் அன்பை உலகெங்கும் விதைப்போம்!
