இயற்கை வேளாண்மையின் மூலம் பாதுகாப்பான உணவு உற்பத்தி! | Veritas Tamil

இயற்கை வேளாண்மையின் மூலம் பாதுகாப்பான உணவு உற்பத்தி!  

 “சிறந்த உணவுக்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் கை கோர்த்து”என்ற தலைப்பில் அக்டோபர் 16 ஆம் தேதி   உலக உணவு தினத்தை அனுசரிக்கும் வேளையில், காரிட்டாஸ் வங்கதேசம் ஆயிரக்கணக்கான சிறு விவசாயிகளுடன் கை கோர்த்து, இயற்கை வேளாண்மையின் மூலம் பாதுகாப்பான மற்றும் நிலைத்தன்மையான உணவு உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது.

பரிசால் மாவட்டத்தின் அகைல்ஜாரா உபஜில்லாவின் ஆத்திபட்டா என்ற அமைதியான கிராமத்தில், 60 வயதான விவசாயி முகம்மது சோலமான் தனது காய்கறித் தோட்டத்தை அக்கறையுடன், பக்தியுடன் பராமரித்து வருகிறார். காரிட்டாஸ் வங்கதேசத்தின் ‘தோரித்ரி திட்டத்தின்’ பங்கேற்பாளரான சோலமான், மனித ஆரோக்கியத்தையும் சூழலையும் காக்கும் வகையில் இயற்கை வேளாண்மையை தன் வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

ரேடியோ வெரிடாஸ் ஆசியாவிடம் நான் ஒரு சிறு விவசாயி,” என சோலமான் கூறினார். “முன்பு நாங்கள் வேதியியல் உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தினோம். ஆனால் காரிட்டாஸ் வழங்கிய பயிற்சியின் மூலம் நான் வெர்மி காம்போஸ்ட் (புழு உரம்) தயாரிப்பது, இயற்கை பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது ஆகியவற்றை கற்றுக்கொண்டேன். இப்போது காய்கறிகள் நன்றாக வளர்கின்றன; அவை எங்கள் குடும்பத்தினருக்கும் நுகர்வோருக்கும் பாதுகாப்பானவை.”

பரிசால் மாவட்டத்தின் அகைல்ஜாரா உபஜில்லாவின் ஆத்திபட்டா என்ற அமைதியான கிராமத்தில், 60 வயதான விவசாயி முகம்மது சோலமான் தனது காய்கறித் தோட்டத்தை அக்கறையுடன், பக்தியுடன் பராமரித்து வருகிறார்

 

அதே கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான விவசாயி ஏதி பாண்டேவும் இதே கருத்தை வெளிப்படுத்தினார். “காரிட்டாஸ் எனக்கு 3,500 டாகா கொடுத்து காய்கறித் தோட்டம் தொடங்க உதவியது,” என்று அவர் கூறினார். “நான் வெர்மி காம்போஸ்ட் மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துகிறேன். செலவு குறைவாகவும், விளைச்சல் அதிகமாகவும் உள்ளது. காய்கறிகள் சந்தையில் நன்றாக விற்கின்றன. நான் ஒரு குளத்தை வாடகைக்கு எடுத்து அதன் கரைகளில் சுரைக்காய், கத்தரிக்காய், பப்பாளி போன்றவற்றை வளர்த்துள்ளேன். இப்போது நல்ல வருமானம் கிடைக்கிறது. இனியும் நல்ல வாழ்க்கைக்காக இயற்கை முறையிலேயே தொடர விரும்புகிறேன்.”என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அதிகாரிகள் கூறுவது: “வேதியியல் உரங்களின் மீது உள்ள சார்பை குறைப்பது, வலுவான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண்மை அமைப்பை உருவாக்க அவசியமானது” என்பதுதான். இந்தப் பின்னணியில், காரிட்டாஸ் வங்கதேசத்தின் பணி.
CAFOD அமைப்பின் ஆதரவுடன் செயல்படும் ‘தோரித்ரி திட்டத்தின்’ மூலம், காரிட்டாஸ் வங்கதேசம், பசுமை தொழில்கள் மற்றும் சூழலியல் வேளாண்மை முறைகளை ஊக்குவித்து, பாதிக்கப்பட்ட சமூகங்களை வலுப்படுத்தி வருகிறது.

அதே கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான விவசாயி ஏதி பாண்டேவும் இதே கருத்தை வெளிப்படுத்தினார்.

 

2023–2024 ஆண்டிற்கான காரிட்டாஸ் வங்கதேசத்தின் ஆண்டு அறிக்கையின்படி, அந்த அமைப்பின் “சூழலியல் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு” பிரிவு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்டியுள்ளது. மொத்தம் 8,207 விவசாயிகள் தற்போது இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் 1,000 டன் புழு உரம், கிட்டத்தட்ட 1,000 டன் குழி உரம் தயாரித்ததுடன், சூழலியல் வேளாண்மையை (Agroecology) நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இந்த உலக உணவு தினத்தில், சோலமான் மற்றும் ஏதி போன்ற விவசாயிகளின் கதைகள் நமக்குச் சொல்லும் உண்மை என்னவெனில் — உண்மையான மாற்றம் அடிப்படையிலேயே தொடங்குகிறது; மண்ணில் கைகள், சமூகத்தில் இதயம், நல்ல எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்ட மனம் — இதுவே மாற்றத்தின் விதை.

Daily Program

Livesteam thumbnail