கடவுள் படைத்த உலகம் - ஒரு நடைபயணம் || Veritas Tamil

nature
nature environment

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவின் வடகிழக்கில் உள்ள கியூசான் என்னும் நகரத்தில் உலகம் உருவான நினைவாக பிரார்த்தனையும், நடைப்பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கியூசான் என்னும் நகரில் உள்ள ஒரு கத்தோலிக்க மறைமாவட்டம் வார்த்தையான இறைவன் இந்த உலகத்தை வார்த்தையால் படைத்த நிகழ்வை நினைவு கூறும் விதமாக காலை 5:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிகழ்வானது கத்தோலிக்க திருஅவையும் பிற பிரிவினை சகோதர சபைகளும் மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள தேவாலயங்களின் தேசிய கவுன்சில் (NCCP) பிரதிநிதிகளுடன் இணைந்து இந்த நடைப்பயணத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

உலக படைப்பு தினம் அல்லது உலக பராமரிப்புக்கான பிரார்த்தனை தினம் செப்டம்பர்  1 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த படைப்பின் உருவாக்கத்தின் கொண்டாட்ட காலம் அக்டோபர் 4 வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நாள் இயற்கையின் புனிதர் புனித பிரான்சிஸ் அசிசியார் அவர்களின் நினைவு தினத்தில் வருவதில் இது ஒரு பொருள் அடங்கிய நினைவு தினமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

2015 ஆம் ஆண்டில், திருத்தந்தை  பிரான்சிஸ், "Laudato Si"  (புகழ் பெற்றவர்) என்ற தலைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க திருமடலை  எழுதினார், இது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய ஆபத்துகள் மற்றும் சிக்கல்களை எதிர்கொள்வது மற்றும் புதைபடிவ எரிபொருட்களின் மீதான நம்பிக்கையை ஏற்படுதல் தொடர்பாக அவர் எழுதிய இந்த திருமடல் இயற்கையை நேசிக்கும் பலருக்கும் இந்த பூமியின் மேலும் இந்த உலகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறியது. உலகம் மனிதர்கள் மட்டும் வாழும் ஒரு கிரகம் அல்ல அது மற்ற உயிர்களையும் உள்ளடக்கி அனைத்து உயிர்களின் உன்னதம்  ஆகியவற்றின் இன்றியமையாமை பற்றி தெளிவாக விளக்கியுள்ளார்.

விவிலியத்தில்  (ஆமோஸ் 5:24), கிறிஸ்தவர்கள் நீதி மற்றும் அமைதியைப் பின்தொடர்வதில், அதாவது காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் நீதியின் பகுதிகளில் தீவிரமாக பங்கேற்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். காலநிலை அநீதி மற்றும் பல்லுயிர் சிதைவு ஆகியவற்றின் சுமைகளைத் தாங்கும் சமூகங்களின் குரல்களை வாதிடவும், வலுப்படுத்தவும் அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்.

சுற்றுச்சூழலின் நல்வாழ்வுக்காக வாதிடுவதற்கு கிறிஸ்தவர்கள் ஒத்துழைக்க வேண்டும். இந்த கூட்டு முயற்சியானது அமைதி மற்றும் நேர்மையின் சக்திவாய்ந்த நீரோட்டத்தில் பங்கேற்பதற்கு ஒப்பானது என்று தெரிவித்துள்ளது.

பூமியுடனும் உறுதியான இணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் அதிகரித்து வருகிறது, மேலும் இது இயற்கையான உலகத்தைப் பராமரிப்பதற்காக மக்களின் மனநிலையையும் நடத்தைகளையும் மாற்றியமைத்து, சுயபரிசோதனையில் ஈடுபட உலக மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது இந்த உலக படைப்பு தினம்.

_அருள்பணி வி. ஜான்சன் SdC

(Translated from RVA English News)