பத்தோடு பதினொன்று அல்ல கிறிஸ்துவின் சீடத்துவம்! | ஆர்.கே.சாமி | Veritas Tamil

19 செப்டம்பர் 2025
பொதுக்காலம் 24ஆம் வாரம் –வெள்ளி
1 திமொத்தேயு 6: 2-12
லூக்கா 8: 1-3
பத்தோடு பதினொன்று அல்ல கிறிஸ்துவின் சீடத்துவம்!
முதல் வாசகம்.
இன்றைய வாசகங்கள் சீடத்துவத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ள நமக்குச் சவால் விடுகின்றன. புனித பவுல், தீமோத்தேயு தனக்குக் கொடுக்கப்பட்ட போதனைகளுக்கு உண்மையாக இருக்கவும், செல்வ ஆசையாலும் உலகப் பற்றாலும் ஆட்கொள்ளப்படாமல் இருக்கவும் வலியுறுத்துகிறார்.
உலக ஆசைகளானது மிகவும் தீவிரமான சீடரைக் கூட நம்பிக்கை நிறைந்த பாதையில் இருந்து திசைதிருப்பக்கூடும் என்பதை புனித பவுல் அறிந்திருக்கிறார். பவுல், திமொத்தேயு அவருடன் இருந்துபோது கற்றக்கொண்ட அனைத்து போதனைகளையும் தீமோத்தேயுவுக்கு நினைவுவூட்டுகிறார்.
ஒரு சீடரின் உலகப்பற்றானது, கிறிஸ்தவ வாழ்க்கையைப் பின்பற்றுவதில் பொறாமை, சச்சரவு மற்றும் அவநம்பிக்கை உள்ளிட்ட அனைத்து வகையான சிதைவுகளுக்கும் வழிவகுக்கும் என்றுரைக்கிறார். உலகப்போக்கான வாழ்வு தன்னலம் நிறைந்த வாழ்வுக்கு வழிகாட்டும். கிறிஸ்துவின் சீடத்துவமோ தன்னலமற்ற, தன்னிடம் உள்ளவற்றில் திருப்தி அடைவதிலும், மற்றவர் நலவாழ்வில் அக்கறை கொள்வதிலும், ஆண்டவராகிய இயேசு திருஅவையில் இணைத்தவர்களைப் பராமரிப்பதிலும் அன்பு செய்வதிலும் ஆழ்ந்த கவனம் செலுத்தும் என்ற திமொதேயுவுக்கு அறிவுறுத்துகிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசுவின் சீடர்கள் பற்றிய ஒரு விபரம் நமக்குத் தரப்பட்டுள்ளது. அவருடன் இருந்த பன்னிரண்டு திருத்தூதர்களும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் போதனையாலும், வல்ல செயல்களாலும் ஈர்க்கப்பட்ட சில பெண்களும் இருந்தனர். இந்தப் பெண்கள் தங்கள் செல்வத்தையும் திறன்களையும் பயன்படுத்தி இயேசு மற்றும் அவரது பன்னிரண்டு திருத்தூதர்களோடு இணைந்து மக்களுக்கு நற்பணி செய்ததாக லூக்க விவரிக்கிறார்.
சிந்தனைக்கு.
உலக வரலாற்றில் நூற்றுக்கணக்கான குருக்கள் தோன்றி மறைந்துள்ளனர். அவர்களுக்கும் சீடர்கள் இருந்தார்கள். சில காலம் குருவுடன் தங்கி பயிற்சி பெற்றபின் தனியே பிரிந்து சென்று அவரும் ஒரு குருவாகச் செயல்படுவார். ஆனால். இயேசு தன்னில் தோற்றுவித்த சீடர்களோ மாறுபட்ட சிந்தனையும் கொள்கையும் கொண்டவர்கள் என்பது அதன் தன்னித்துவமாகும்.
இயேசுவின் உண்மையான சீடராக இருப்பது என்பது மற்றவர்களின் நல்வாழ்வில் அக்கறை கொள்வதாகும். குறிப்பாக உலகப்பற்று அற்றவர்களாக இருந்தல் இன்றியமையாதப் பண்பும் எதிர்ப்பார்ப்புமாகும். பத்தோடு பதினொன்று அத்தோடு நானும் ஒன்று என்பது இயேசுவின் சீடத்துவத்திற்கு ஏற்றதல்ல.
‘உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக’ என்பது இயேசுவின் சீடத்துவத்திற்கான கொள்கை அல்ல. ‘நான் பிறந்தது உலகத்திறகாக, நான் ஓடுவதும் நதிகளுக்காக’ என்பதே கிறிஸ்துவின் சீடத்துதவத்திற்கான மாற்று சிந்தனையும் செயல்பாடுமாகும்.
உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது. எனவே, உணவும் உடையும் நமக்கு இருந்தால் அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம் என்று முதல் வாசகத்தில் பவுல் அடிகள் அறிவுறுத்துவதோடு, பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். இயேசுவுடனான நம்பிக்கை வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலைவாழ்வைப் பற்றிக்கொள் என்கிறார் புவல் அடிகள்.
இன்றைய நற்செய்தி மூன்று பெண்களின் பெயர்களையும் குறிப்பிடுகிறது: மகதலா மரியா, யோவன்னா மற்றும் சூசன்னா. இவர்கள் நம் ஆண்டவரால் ஆழமாகத் தொட்டவர்களில் ஒரு சிலர், அவர்கள் அனைவரும் அவரைப் பின்பற்றுவதற்காக உடமைகளைத் துறந்து அவரைப் பின்பற்றினர். அதன் விளைவு இன்றும் நாம அவர்கைளப் பற்றி பேசுகிறோம்.
சீரத்துவத்தில் ஆர்ப்பாட்ட வாழ்வுக்கு கிஞ்சிற்றும் இடமில்லை. நாம் வசதிப்படைத்தோராகவோ, கல்விகேள்விகளில் உயர் பட்டம் பெற்றவர்களாகவோ, துறவரத்தாராகவோ இருக்கலாம். நம்மில் செருக்கும் ஆர்ப்பாட்டமும் இருக்குமேயானால் அடுத்து வருவது அழிவுதான். நமது வாழ்வின் வெற்றி கிறிஸ்துவின் கொள்கையில் அடங்கியுள்ளது. ஆம், கிறிஸ்துவின் சீடத்துவம் என்பது அடக்கி ஆள்வதல்ல, அனைத்தையும் அன்பில் ஆள்வது.
இறைவேண்டல்.
என் வாழ்க்கை உம்முடையது, அன்பான ஆண்டவரே. தயைக்கூர்ந்து, என் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நுழைந்து என்னை உமது மாட்சிக்காப் பயன்படுத்துவீராக. ஆமென்.
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
