கொண்டு வராத எதையும் கொண்டுப் போகப்போவதில்லை! ஆர்.கே. சாமி | VeritasTamil
30 செப்டம்பர் 2023, பொதுக்காலம் 26ஆம் வாரம் –திங்கள்
யோபு 1: 6-22
லூக்கா 9: 46-50
கொண்டு வராத எதையும் கொண்டுப் போகப்போவதில்லை!
முதல் வாசகம்.
முன்னுரை
இந்த வாரம் விவிலியத்தின் ஞான இலக்கியங்களுள் ‘யோபு’ என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்ட வாசகங்களில் சிலவற்றைக் கேட்கறோம். ஒரு காலத்தில் கடவுளுக்கு ஏற்ற நீதிமானாக ஒருவர் வாழ்ந்து வந்தார்; அவர் பெயர் யோபு. அவர் பெரிய செல்வந்தனர் என்று கூறப்படுகிறது. கடவுளுக்கு அஞ்சி நடந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள், சாத்தான் ஆண்டவரைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது ஆண்டவர் சாத்தானிடம், “என் ஊழியன் யோபைப் பார்த்தாயா? அவனைப் போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி, தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை” என்று கூற, உம்மிடமிருந்து பல ஆசீகளைப் பெற்றதற்கு நன்றி கடனாகத்தான் யோபு உமக்கு அஞ்சி நடக்கிறான் என்று ஆண்டவரிடம் சவால் விடுகிறான். அவன், யோபு பெற்ற அனைத்தையும் கடவுள் நீக்கிவிட்டால் யோபு கண்டிப்பாக கடவுளைத் தூற்றுவான் என்று சாத்தான் கூறுகிறான். அதன்படி யோபு மனைவி, பிள்ளகைள் உட்பட அனைத்தையும் இழக்கச் செய்தான்
இப்போது, யோபு அனைத்தையும் இழந்தவராக அறிமுகமாகிறர். அவர் உயர்ந்ததொரு தத்துதவத்தை வெளிப்படுத்துகிறார். அவர் தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டார்; தம் தலையை மழித்துக் கொண்டார். பின்பு தரையில் விழுந்து வணங்கி, “என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் யான் வந்தேன்; அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன், ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக் கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப் பெறுக!” என்றார். இந்நிலையிலும் சாத்தானின் சூழ்ச்சிக்கு எதிராக, யோவு கடவுளைத் தூற்றவில்லை.
நற்செய்தி.
நற்செய்தி வாசகத்தில், சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற விவாதத்தில் ஈடுபடுகின்றார்கள். இதனைக் ஞானத்தால் அறிந்த இயேசு, ஒரு சிறு பிள்ளையை எடுத்து, தம் அருகே நிறுத்தி, அவர்களிடம், “இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்” என்கின்றார்
சிந்தனைக்கு.
இன்றைய நற்செய்தியில், சீடர்களின் மனித நேயத்தை நாம் மீண்டும் ஒருமுறை பார்க்கிறோம். அவர்கள் இன்னும் இயேசுவோடு பயிற்சியில் தான் உள்ளனர். இந்நிலையில் அவர்களுள் மேலும், யார் மிகப் பெரிய என்ற கேள்வி எழுகிறது.
இயேசு அவர்களைக் குழப்பத்தில் விட்டுவிடவில்லை. அவர் சீடர்களிடம் “அவர்களுடைய கேள்வியின் நோக்கத்தை உணர்ந்து” உடனே தலையிடுகிறார். ஏனெனில், வீண்பெருமைக்கான ஆசை சீடர்கள் மத்தியில் ஆரம்பமாகியதை இயேசு கவனித்தார். சீடர்களுக்கு அத்தகையை பதவிப் போராட்டம் ஆகாது.
இயேசுவின் இந்தச் செயலை நாம் புரிந்துகொள்வது முக்கியம். ஏனென்றால் அவர் தம் சீடர்களில் துளிர்விட்ட தீய எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிய விரும்புகிறார். நம்மில் துளிர்விடும் தீய எண்ணங்களை உடனுக்குடன் அகற்றினால் அவை நம்மில் நிலைக்காது. சொல்லும் செயலும் சுயநலத்தை நாடினால் நமது சீடத்துவ வாழ்வு பாழாகும். இதை தம் சீடர்களுக்குஉணர்த்துகிறார் ஆண்டவர்.
முதல் வாசகத்தில் யோபு தான் ஒரு பாவமும் செய்யாத நிலையில் தண்டிக்கப்பட்டாலும் அவர் தான் ஒரு நிரபராதி, ஒரு பாவமும் அறியாதவர் என்றே போராடுகிறார். அந்த மனோபலம் நமக்குத் தேவை. பிறந்த மேனியனாய் யான் வந்தேன்; அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன் என்று உறுதியாகக் கூறுகிறார். யாருக்காகவும் தனது தூய கொள்கையை விடுக்கொடுக்காத நிலையில் தன் மனைவி உட்பட நண்பர்களுடன் வாதாடுகிறார்.
சோதிப்பவன் சாத்தான் கடவுள் அல்ல. கடவுள் நமது நன்மைக்காக சோதனையை அனுமதிக்கிறார் எனும் உண்மையை முதல் வாசகம் செய்தியாகத் தருகிறது. வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும், இறைவனுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதை, யோபுவின் கதை உணர்த்துகிறது. நம்முடைய துன்பங்களிலும் இறைவன் நமக்கு துணையாயிருக்கிறார் என்பதோடு, துன்பதிலும் யோபுவைப் போல ஆண்டவரைப் பகழும் மனம் நமக்குத் தேவை.
இறைவேண்டல்.
"யார் பெரியவன்" என்ற உமது சீடர்களின் போராட்டத்தில் அவர்களைத் தெளிவுப்படுத்திய அன்பு இயேசுவே, என்னில், இத்தகைய போராட்ட எண்ணம் துளரிர் விடாமல் காத்தருள்வீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா) ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம் +6 0122285452