ஆண்டவர் திரும்பி வருவார் என்பதுதான் இறைவார்த்தை நமக்குத் தரும் நம்பிக்கையாக இருக்கின்றது. அவரது வருகையானது வெறும் வருகையாக இராது. அது தீர்ப்பிடும் வருகை. அவரது முன்னால் நமது தீயச் செயல்கள் மட்டில் கூனி குறுகி நிற்காமல் இருக்க நம்மை நாம் சீர் செய்துகொள்ள வேண்டும்.
வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா